Aran Sei

இஸ்லாமியர்களுக்கு எதிராக முழக்கம் எழுப்பியவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – காவல்துறை விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பேசிய இரண்டு இந்துத்துவவாதிகளின் மீது  முதல் தகவல் அறிக்கைப் பதியாதது குறித்து  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜாமியா நகர் காவலர்களுக்கு  டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 4 அன்று, பைசல் அகமத் கான் என்பவர் இரண்டு வெவேறு நிகழ்வுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் முழக்கம் எழுப்பியது குறித்து ஜாமியா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், மூன்று நாட்களுக்குப் பின்னர், இருவரின் மீதும் காவல்துறை முதல் தகவல் அறிக்கைப் பதிய வேண்டுமென கோரிக்கை விடுத்து சாகட் மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

பைசல் அகமத் கான் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 , 153 ஏ, 153 பி, 295 ஏ,298,504 , 505-1,505-2, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் தனித்தனியே இரு முதல் தகவல் அறிக்கைப் பதியப்பட வேண்டுமென கோரிஇருந்தார்.

இந்நிலையில் அகமத்  அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டுமென  ஜாமியா காவல்நிலைய அலுவலருக்கு(எஸ்.ஹச்.ஒ)  கடந்த  ஆகஸ்ட் 11 அன்று சாகட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கில் வரும் செப்டம்பர் 27 வரை  எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்பிக்க  ஜாமியா காவல்நிலைய (எஸ்.ஹச்.ஒ) அலுவலருக்கு நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

பைசல் அகமத் கான் முதல் தகவல் அறிக்கை பதியப்பட வேண்டுமென கோரியுள்ளவர்களில் ஒருவர் காசியாபாத்தில் உள்ள தாஸனா கோவிலின் தலைமை பூசாரி நரசிங்கனாந்த், மற்றொருவர் கர்ணி சேனா அமைப்பின் தலைவர் சுராஜ் பால் அமு  ஆகியோர் ஆவர்.

source: தி வயர்

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்