Aran Sei

டெல்லி மாநகராட்சி இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வி – கலவரம் நடைபெற்ற வார்டை கைப்பற்றிய காங்கிரஸ்

டெல்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்னும் ஓர் ஆண்டில் நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியான மாநகராட்சி இடைத் தேர்தல் முடிவுகளில், ஆம் ஆத்மி கட்சி, ஐந்தில் நான்கு வார்டுகளை வெற்றுள்ளது.

காங்கிரஸிடம் ஒரு வார்ட்டை இழந்துள்ளது ஆம் ஆத்மி, பாஜகவிடம் இருந்து ஒரு வார்ட்டை வென்றுள்ளது. ஐந்து வார்டுகளின் தேர்தல் முடிவுகளில், அனைத்திலும் பாஜக தோல்வியை தழுவியுள்ளது.

டெல்லி கலவர வழக்கில் நீதி கிடைப்பதில் தாமதம் – பிருந்தா காரத் குற்றச்சாட்டு

இடைத்தேர்தல் நடந்த ஐந்து வார்டுகளில், ஆம் ஆத்மி கட்சிக்கு 46.10 சதவீத வாக்குகளும், பாஜகவுக்கு 27.29  சதவீதம், காங்கிரஸ் கட்சி 21.84 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளது. டெல்லியில் 272 வார்டுகள் உள்ள நிலையில், அவற்றில் ஐந்தில் இடைதேர்தல் நடைபெற்றது. இதில், ஷாலிமார் பாக் வார்டில், பாஜகவின் தோல்வி பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், ஏனென்றால், அது பாஜகவின் கோட்டையாக கருதப்பட்டது என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது.

இதேபோல், ஓராண்டுக்கு முன்பு கலவரம் நடைபெற்ற வட கிழக்கு டெல்லியின் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள வார்டான சவுகான் பங்கரில், ஆம் ஆத்மி கட்சியின் தோல்வியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது. கடந்த முறை அந்த வார்டை ஆம் ஆத்மி கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது, காங்கிரஸ் வேட்பாளர் சவுத்ரி ஜுபைர் அகமது, ஆம் ஆத்மி கட்சியின் மொஹமட் இஷ்ராக் கானை, 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.

டெல்லி கலவரத்திற்கு ஓராண்டுக்குப் பின் – மதவாத பதற்றத்தை நீட்டிக்க முயற்சிக்கும் பாஜகவின் கபில் மிஸ்ரா

சென்ற ஆண்டு நிகழ்ந்த வன்முறையும், தப்லிக் ஜமாத் உறுப்பினர்களால் கொரோனா தொற்று பரவியதாக பரப்பப்பட்ட வதந்திகளும், ஆம் ஆத்மியின் தோல்விக்கும், காங்கிரஸ் பெற்ற வாக்கு எண்ணிக்கைக்கும் காரணமாக பார்க்கப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைதேர்தலில், ஆம் ஆத்மி மற்ற நான்கு இடங்களை வென்றாலும், சவுகான் பங்கர் வார்ட்டை தவிர, மற்ற அனைத்திலும் பாஜக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இது சில வார்ட்டுகளை தவிர்த்து, மற்ற பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு இன்னும் குறைந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், டெல்லி மாநகராட்சியை, பாஜக நான்கு முறை வென்றுள்ளது. ஆனால்,  பாஜக ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாகத்தில் ஈடுபட்டதாகவும், மக்களை துன்பப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டுகளை முன்வைத்து, அதற்கு எதிராக ஒரு வலுவான கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

இன்றைய தேர்தல் முடிவுகள் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அக்கட்சி தங்கள் கோட்டையான கிழக்கு டெல்லியில் உள்ள இடங்களைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வடகிழக்கு டெல்லி பகுதியில் ஒரு இடத்தை இழந்துள்ளது.

மறுபுறம், காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஒரு சிறிய அளவிலான ஊக்கத்தைப் பெற்றதாகத் தெரிகிறது என்றும் ஆனால், மற்ற வார்டுகளில் அந்த கட்சியால் இரண்டாம் இடத்தைக் கூட பிடிக்க முடியாததை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

மொத்தமாக இம்முடிவுகள், பாஜகவுக்கு பெரிய இழப்பு என்பதும், பாஜக பெற்ற வாக்கு சதவீதமும் ஆம் ஆத்மி கட்சி பெற்றதில் பாதிதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்