Aran Sei

டெல்லி மயானத்தில் பணிபுரியும் துணை ஆய்வாளர் – மக்களுக்காக மகளின் திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்

டெல்லி மயானத்தில் பணிபுரியும் காவல்துறை துணை ஆய்வாளர் ராகேஷ் குமார், மக்களின் சேவைக்காக தனது மகளின் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.

ஹஸ்ரத் நிஜாமுதின் காவல் நிலையத்தில் 36 வருடங்களாக பணிபுரிந்துவரும் அவர், கடந்த ஏப்ரல் 13 ஆம் தேதி, லோதி மயானத்தின் பாதுகாப்பு பணிக்கு பொறுப்பேற்றுள்ளார். மயானத்தில் தொடர்ச்சியாக பணிபுரிந்து வருவதால், மே 7 ஆம் தேதி நடக்கவிருந்த மகளின் திருமணத்தை அவர் தள்ளி வைத்துள்ளார்.

மகளின் திருமணத்தை தள்ளி வைத்ததற்கு காரணமாக, ”நான் தினமும் பாதுகாப்பு கவசமும் உடையும் அணிவதால், எனக்கு கொரோனா தொற்று இருக்க வாய்ப்பில்லை என உறுதியாக சொல்ல முடியாது. எனக்கு கொரோனா தொற்று இருந்து, அது என் குடும்பத்தினருக்கு பரவி விட்டலாம். அந்த ரிஸ்கை எடுக்க நான் விரும்பவில்லை. மேலும், என்னுடைய சேவையும் பணியும் இங்கே பல குடும்பங்களுக்கு தேவையிருக்கும் நிலையில், எவ்வாறு விடுப்பு எடுத்து விட்டு என் மகளின் திருமணத்தில், கொண்டாட்ட மனநிலையில் இருக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

கொரோனா முன்களப்பணியில் மாற்றுப் பாலினத்தவர்கள் – மஹாராஷ்ட்ரா அரசு நடவடிக்கை

தினமும் காலை 7 மணிக்கு பணிக்கு வரும் ராகேஷ், மாலை 7 முதல் 8 மணி வரை பணிபுரிகிறார். மயானத்தில் சடலங்களை எரிக்க உதவுவது, இறுதிச் சடங்கு பூஜை பொருட்களை வாங்கி வருவது, ஆம்புலன்ஸில் இருந்து உடல்களை தூக்கி வருவது, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுடன் தொடர்பில் இருப்பபது போன்ற பணிகளை செய்து வருவதாக அவர் கூறுகிறார்.

நாளொன்று 47 உடல்கள் தகனம் செய்ய முடிந்த இடத்தில், 60 உடல்கள் வரை வருவதாகவும், கொரோனா தொற்றுக்கு பிறகு இது 6 மடங்காக உயர்ந்திருப்பதாகவும் ராகேஷ் கூறியுள்ளார்.

“எரியூட்டப்படும் உடல்களில் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதால், 15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வீட்டிற்கு செல்கிறேன். என்னால் முடிந்த வரை கொரோனா பாதிப்பு ஏற்படாமலும், என்னிடம் இருந்து யாருக்கும் பரவாமலும் பார்த்துக் கொள்கிறேன். கடந்த மாதம் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் செலுத்திக் கொண்டதால் மனதளவிலும் திடமாக உணர்கிறேன்” என ராகேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Source : Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்