சர்வதேச சந்தையில் இந்திய மாநிலங்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன என்றும் இதில், இந்தியா என்ற நாடு எங்கே என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று (மே 13), தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பகிந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “சர்வதேச சந்தையில் இந்திய மாநிலங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடும் / சண்டையிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. உத்தரபிரதேசம் மகாராஷ்ட்ராவுடன் சண்டையிடுகிறது. மகாராஷ்ட்ரா ஒடிசாவுடன் சண்டையிடுகிறது. ஒடிசா டெல்லியுடன் சண்டையிடுகிறது. இதில், “இந்தியா” என்ற நாடு எங்கே? இந்தியாவிற்கு அவப்பெயரையே இது கொடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
Indian states left to compete/fight with each other in international market. UP fighting Maha, Maha fighting Orissa, Orissa fighting Delhi. Where is “India”? Portrays such a bad image of India
India, as one country, shud procure vaccines on behalf of all Indian states https://t.co/Etby5kenOk
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 13, 2021
மாநில சுயாட்சி குறித்து சிந்திக்க வேண்டிய காலம்: பிரவீண் ராஜ்
மேலும், இந்தியா, ஒரு நாடாக, அனைத்து இந்திய மாநிலங்களின் சார்பாகவும் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மற்றொரு ட்விட்டர் பதிவில், “கொரோனா தடுப்பு மருந்து வாங்கும் பொருட்டு, மருந்து உற்பத்தியாளர்களையும் அவர்களது நாடுகளையும் நாங்கள் தனிப்பட்ட முறையில் ஒரு மாநில அந்தஸ்துடன் அணுகுவதை விட, இந்தியா என்று அணுகும்போது, பேரம் பேசும் சக்தியானது அதிகரிக்கும். இந்திய அரசுக்கு அந்நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிக ஆளுமை உள்ளது.” என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.