Aran Sei

ஆக்ஸிஜன் தாருங்கள் நன்றியோடு இருப்பேன் – அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம்

ங்கள் மாநில அரசிடம் இருந்தோ அல்லது உங்கள் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்தோ ஆக்ஸிஜனுடன் டேங்கரையும் சேர்த்து வழங்க முடிந்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று (ஏப்ரல் 24) இரவு, தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்களிடம் கூடுதலாக இருந்தால், டெல்லிக்கு ஆக்ஸிஜன் வழங்குமாறு அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். மத்திய அரசு எங்களுக்கு உதவி செய்கிறது என்றாலும், கொரோனாவின் இந்தத் தீவிரத்தன்மையில் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களும் போதுமானதாக இல்லை.” என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “உங்கள் மாநில அரசிடம் இருந்தோ அல்லது உங்கள் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்களிடம் இருந்தோ ஆக்ஸிஜனுடன் டேங்கரையும் சேர்த்து வழங்க முடிந்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன். தயவுசெய்து இதை ஒரு போர் கால உதவியாக கருதுங்கள்.” என்று கோரியுள்ளார்.

ஆக்சிஜன் வழங்கப்படவில்லை என்றால் டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும் – உயர்நீதிமன்றத்தில் டெல்லி அரசு தகவல்

மேலும், “நாம் அனைவரும் கொரோனாவை தாண்டி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நல்ல, திறமையான ஒரு அரசு எப்படி இருக்கும் என்பதை உலகுக்குக் காட்ட வேண்டும்.” என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மை நாட்களாக, தினமும் 20,000-க்கும் மேற்பட்ட தொற்று எண்ணிக்கை டெல்லியில் பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 23), டெல்லியில் மட்டும் 348 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டது.

Source : NDTV

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்