மாநில அரசுகளுடன் சண்டையிடுவதற்கான நேரம் இது அல்ல என்றும் அவர்கள் அனைவருடனும் இணைந்து கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நேரம் என்றும் இந்திய ஒன்றிய அரசை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
அண்மையில், மேற்கு வங்க மாநில தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை திரும்பபெறுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், மே 31 ஆம் தேதிக்குள் அவரை பணியாளர் பயற்சி துறைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
‘மேற்கு வங்கத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும், பிரிவினைவாத அரசியலும் தோல்வியடைந்துள்ளது’ – கபில் சிபல்
இந்த உத்தரவை ஏற்க மறுத்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தில், “இக்கட்டான கொரோனா பேரிடர் காலத்தில், மேற்குவங்க தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைக்கும் செயலை ஏற்க முடியாது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் அவருக்கு பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் தெரிவித்து இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த திடீர் மாற்றம் எதற்கு? ஒருதலைபட்சமான இந்த உத்தரவை உள்துறை அமைச்சகம் திரும்பப் பெற வேண்டும்.” என்று வலியுறுத்தியிருந்தார்.
இதுதொடர்பாக, இன்று (மே 23), அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில், “இது மாநில அரசுகளுடன் சண்டையிடுவதற்கான நேரம் அல்ல. அவர்கள் அனைவருடனும் இணைந்து கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான நேரம்.” என்று தெரிவித்துள்ளார்.
ये समय राज्य सरकारों से लड़ने का नहीं है, सबके साथ मिलकर करोना से लड़ने का है। ये समय राज्य सरकारों की मदद करने का है, उन्हें वैक्सीन उपलब्ध करवाने का है, सभी राज्य सरकारों को साथ लेकर एक होकर टीम इंडिया बनकर काम करने का है। लड़ाई झगड़े और राजनीति करने को पूरी ज़िंदगी पड़ी है pic.twitter.com/qwUVjcLA3i
— Arvind Kejriwal (@ArvindKejriwal) May 31, 2021
மேலும், “மாநிலங்களுக்குத் தேவையான தடுப்பு மருந்துகளை வழங்கி அவர்களுக்கு ஒன்றிய அரசு உதவ வேண்டும். அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிணைத்து இந்திய அணியாக பணியாற்றுவதற்கான நேரம் இது.” என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.
Source; pti
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.