Aran Sei

எத்தனை பண்டிட்டுகளை காஷ்மீரில் மறு குடியமர்வு செய்தது பாஜக? – அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி

Image credit : indianexpress.com

காஷ்மீர் பண்டிட்டுகளின் வெளியேற்றம் தொடர்பாக பாஜக அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ள  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “எத்தனை பண்டிட்டுகளை பாஜக கட்சி காஷ்மீரில் மறு குடியேற்றம் செய்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அதன் வழியாக இதுவரை கிடைத்த வருமானத்தை காஷ்மீர் பண்டிட்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்றும் அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று (மார்ச் 26), டெல்லியில், பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியுள்ள அரவிந்த் கெஜ்ரிவால், “கடந்த 8 ஆண்டுகளில் பாஜகவால் ஒரு பண்டிட் குடும்பமாவது காஷ்மீருக்கும் மறு குடியேற்றம் செய்யப்பட்டதா?” என்று பாஜகவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூட்யூபில் வெளியிடுங்கள், வரிவிலக்கு எல்லாம் தரமுடியாது: அரவிந்த் கெஜ்ரிவால்

“இந்த விவகாரத்தில் பாஜக அரசியல் செய்கிறது. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை யூடியூப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என நாங்கள் கோருகிறோம். அதில் கிடைக்கும் பணத்தை காஷ்மீரி பண்டிட்களின் நலனுக்காக செலவிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

மார்ச் 24ஆம் தேதி அன்று, இத்திரைப்படம் குறித்து டெல்லி சட்டப்பேரவையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு கோரும் பாஜகவின் செயலை விமர்சித்தார். மேலும், அனைவரும் இலவசமாகப் பார்க்க வேண்டும் என்றால் அத்திரைப்படத்தை யூட்யூடில் பதிவேற்றுங்கள் என்று கூறியிருந்தார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்