Aran Sei

‘பீட்சாவை வீடுகளுக்கே சென்று வழங்கும்போது, ஏன் ரேஷன் பொருட்களை வழங்கக்கூடாது?’ – ஒன்றிய அரசுக்கு டெல்லி முதல்வர் கேள்வி

பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆடைகளை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் போது, ஏன் ரேஷன் பொருட்களை வழங்கக்கூடாது என்று இந்திய ஒன்றிய அரசை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (ஜூன் 6), இணையவழியிலான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “வீடுகளுக்கே சென்ற ரேஷன் பொருட்களை நேரடியாக விநியோகம் செய்யும் திட்டத்தை நாங்கள் அமல்படுத்தினோம். அதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்க வேண்டிய அவசியம் டெல்லி அரசுக்கு இல்லை. ஆனாலும், எதேனும் இடையூறு வரக்கூடாது என்று எண்ணி, ஒன்றிய அரசிடம் ஐந்து முறை அனுமதி கேட்கப்பட்டது.” என்று தெரிவித்துள்ளார்.

‘மக்களின் வேதனையைப் பொருட்படுத்தாத உணர்ச்சியற்ற அரசு’ – ஒன்றிய அரசின் பொருளாதார நடவடிக்கை குறித்து ப.சிதம்பரம் விமர்சனம்

“ஆனாலும், இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதியளிக்க மறுத்துவிட்டது. இத்திட்டத்தின் வழியாக, டெல்லியில் 72 லட்சம் மக்கள் பயனடைவர். கொரோனா காலத்தில், நாட்டின் நலன் கருதி இந்தத் திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், தொற்று பரவும் மையமாக ரேசன் கடைகள் மாறிவிடும்.” என்று அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், பீட்சா, பர்கர், ஸ்மார்ட் போன்கள் மற்றும் ஆடைகளை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும்போது, ஏன் ரேஷன் பொருட்களை அப்படி வழங்கக் கூடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரேஷன் பொருட்கள் கிடைக்காத ஏழைகள் : அதிர்ச்சியூட்டும் புதிய ஆய்வு

“மாநில அரசுகளுடன் மோதல் போக்கையே ஒன்றிய அரசு தொடர்ந்து கையாண்டு வருகிறது. மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, டில்லி, ஜார்க்கண்ட் மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுப்பதோடு, டெல்லியில் போராடும் விவசாயிகளுடனும் லட்சத்தீவு மக்களுடனும் ஒன்றிய அரசு சண்டையிட்டுக்கொண்டிருக்கிறது.” என்று இணையவழியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Source; ndtv

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்