Aran Sei

முகக்கவசம் அணியாமல் பயணித்த மாணவரை  தாக்கிய டெல்லி பாதுகாப்புபடை தன்னார்வலர் – திருப்பித்தாக்கியதால் பரபரப்பு

முகக்கவசம் அணியாதவரை  டெல்லி மக்கள் பாதுகாப்புப்படை சேர்ந்த  தன்னார்வலர் பெல்ட்டால் தாக்கியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘இஸ்லாமியர்’ எனக்கூறி அகற்றப்பட்ட சாய்பாபா சிலை: விசாரணையில் டெல்லி காவல்துறை

டெல்லி தொழிற்நுட்ப கழக சிக்னல் அருகே டெல்லி மக்கள் பாதுகாப்புப்படை சேர்ந்த  தன்னார்வலர்கள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது முகக்கவசம் அணியாமல் பயணித்த கிதேஷ் தாகர் என்பவர் சிக்னலில் பச்சை விளக்கு எரியவே வாகனத்தை நகர்த்த அங்கு அபாரதம் விதித்துக்கொண்டிருந்த மக்கள் பாதுகாப்புப்படை தன்னார்வலருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கலவரத்துக்கு ஒரு ஆண்டுக்குப் பிறகும் தொடரும் பலி வேட்டை : டெல்லி காவல்துறைக்கு கண்டனம்

 

இந்நிலையில் கோபமடைந்த தன்னார்வலர் தன் இடுப்பில் அணிந்திருந்த பெல்ட்டால் கிதேஷை தாக்கியுள்ளார். இதுகுறித்தக் காணொளி டிவிட்டர் தளத்திலும் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தச் சம்பவத்திற்கு பின் அங்குக் குழுமியிருந்த மாணவர்களும் தன்னார்வலரின் மீது தாக்குதலில் ஈடுபட்டதாகவும் இதுகுறித்து இருதரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்