Aran Sei

பொய் பரப்புவதை எதிர்த்தால் தேச துரோகியா ? – கட்சியிலிருந்து வெளியேறிய பாஜக நிர்வாகி

பொய்யான தகவல்களையும் தவறான செய்திகளையும் ஏன் பரப்புகிறீர்கள் என்று கேட்டதற்கு, பாஜக தலைவர்கள் தன்னை தேச துரோகி என்று குற்றம் சாட்டுகிறார்கள் என்று கூறி, தில்லி பாஜக-வில் இருந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு தில்லியில் உள்ள திலக் நகர் மண்டல் தொகுதியில் பாஜக தகவல் தொழிற்நுட்ப பிரிவின் தலைவராக இருந்தவர் சுக்ப்ரீத் சிங்.

’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, திலக் நகர் தொகுதி பாஜக தலைவருக்கு அனுப்பிய கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”சுக்ப்ரீத் சிங் ஆகிய நான், 2019-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தேன். கட்சியை வளர்ப்பதற்காகக் கடுமையாக உழைத்து வந்துள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தாண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், திலக் நகர் தொகுதியின் பாஜக இணை பிரச்சார ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினேன். தற்போது, மேற்கு தில்லி திலக் நகர் தொகுதியின் தகவல் தொழிற்நுட்ப பிரிவு தலைவராகப் பணியாற்றிவருகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக வதந்தி பரப்பிய தொலைக்காட்சி – தோலுரித்த ALT news

”நான் இந்த பதவியிலிருந்து விலகுவதற்கான காரணம், பாஜக தகவல் தொழிற்நுட்ப பிரிவினர், தவறான செய்திகளையும் பொய்யான தகவல்களையும் குடிமக்களிடையே பரப்பி வருகிறார்கள். இதை நான் எதிர்த்து கேட்டதற்கு, பாஜக தலைவர்கள் என்னை தேச துரோகி என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “கட்சியில் பணியாற்ற வாய்ப்புக் கொடுத்ததற்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

சுக்ப்ரீத் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில், தொடர்ந்து விவசாய போராட்டங்களுக்கு ஆதரவான கருத்துகளையும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்