Aran Sei

ஷாகின் பாக் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் : பாஜகவில் இணைந்தார்

credits : india today

கடந்த ஆண்டு (2019) மத்திய அரசு கொண்டு வந்த இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

டெல்லி ஷாகின் பாக் பகுதியில்  நடைபெற்ற தொடர் போராட்டத்தில்  இஸ்லாமிய பெண்கள் அதிகளவில் கலந்துக் கொண்டனர். இந்தப் போராட்டம் டிசம்பர் 14, 2019 அன்று தொடங்கி 14 மார்ச் 2020 வரை தொடர்ந்தது (101 நாட்கள்). கொரோனா தொற்று பரவ தொடங்கியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

`சிஏஏ விரைவில் அமலாகும்’ – பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தகவல்

இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 1 2020 அன்று, டெல்லியில் நடந்த ஷாகின்பாக் போராட்டத்தை கலைப்பதற்காக நொய்தா பகுதியைச் சேர்ந்த கபில் குஜ்ஜார் எனும் இளைஞர் ஒருவர் துப்பாக்கிசூட்டை நடத்தினார். ”இந்து ராஷ்ட்ரியம் வாழ்க” எனும் கோஷமிட்டபடியே அவர் இரண்டு முறை வானத்தை நோக்கி சுட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

’சிஏஏ போராட்டம் தொடரும்’: டைம்ஸ் இதழில் இடம்பெற்ற பில்கிஸ் பாட்டி

ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பிய குஜ்ஜார், இந்த நாட்டில் இந்துக்களுக்கு மட்டுமே கருத்து கூற உரிமையுள்ளது, வேறு யாருக்கும் கிடையாது என கூறியதாக நேஷனல் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ஷாகின் பாக்கில் நடக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் சாலைகள் முடக்கப்பட்டு போக்குவரத்து நெரிசல் அதிகமானதில் ஆத்திரமடைந்து அவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இந்தியா டுடே பதிவிட்டுள்ளது.

ஷாகீன்பாக் போன்ற போராட்டங்கள் கூடாது – உச்சநீதி மன்றம்

ஷாகின் பாக் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் காவல்துறையால் கைது செய்யப்பட்ட அவர், ஒரே மாதத்தில் (மார்ச் 8) டெல்லி உயர் நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டார்.

இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர் எனும் தகவல் பரவி வந்தது. இந்தக் கருத்தை மறுத்த குஜ்ஜாரின் தந்தை ”எனது மகன் மோடி மற்றும் அமித்ஷாவின் ஆதரவாளன். அவன் எப்போதும் இந்துஸ்தான் மற்றும் இந்துத்துவம் குறித்தே பேசுவான்” என தெரிவித்ததாக தி ஸ்க்ரால் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி காசியாபாத் பகுதியில், பாஜக தலைவர்கள் முன்னிலையில் கபில் குஜ்ஜார் அதிகாரப்பூர்வமாக தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்