உலகில் காண்காணிப்பு அதிகமுள்ள நகரங்களுக்கான பட்டியலில், டெல்லி முதலிடத்தில் உள்ளது. சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது.
இதுதொடர்பாக, இந்தியா போர்பஸ் இணையதளத்தில் வெளியான பட்டியலானது, உலகில் 150 முக்கிய நகரங்களில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு மே மாதம் வரையிலான தரவுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
இப்பட்டியலில் முதலிடத்தில் டெல்லி உள்ளது. டெல்லி நகரில் ஒரு சதுர மைலுக்கு 1826.6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒரு சதுர மைலுக்கு 1,138.5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மூன்றாவது இடம் பெற்றிருக்கும் சென்னையில் ஒரு சதுர மைலுக்கு 609.9 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 18 ஆவது இடத்தில் உள்ள மும்பையில் ஒரு சதுர மைலுக்கு 157.4 கேமராக்கள் உள்ளன.
சீனா நகரங்களான சன்ஷன், வூசி, ஷாங்காய் நகரங்களில் முறையே, 520.1, 472.7, 408.5 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிங்கப்பூர் நகரத்தில் 387.6 கண்காணிப்பு கேமராக்களும், நியூயார்க் நகரில் 193.7 கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.