Aran Sei

டெல்லியில் ஒரு முதல்வன் அர்ஜுன் – சாக்கடையை சுத்தம் செய்தபின் பாலில் குளித்த ஆம் ஆத்மி கவுன்சிலர்

டெல்லி மாநகராட்சி தேர்தல் பரப்புரை உச்சத்தில் உள்ள நிலையில், கிழக்கு டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் ஹசீப்-உல்-ஹசன், சாஸ்திரி பூங்காவில் நிரம்பி வழியும் கழிவுநீர் வடிகால் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்துவிட்டு பின்னர் பாலில் குளித்துள்ளார்.

அலைபேசியில் எடுக்கப்பட்ட காணொளியில், நெஞ்சு வரை குப்பைகள் மிதக்கும் தொட்டியில் இறங்கி, தன்னை சுற்றியுள்ள குப்பைகளை குப்பையள்ளும் ஈட்டிக்கம்பியால் இழுத்து வெளியே வீசுகிறார். அவரது உதவியாளர்கள் அவரை சுற்றி நின்றுக்கொண்டு, அவருக்கு உதவி செய்துக்கொண்டிருப்பதை காணொளியில் காணலாம்.

பஞ்சாப்: ஆம் ஆத்மி அமைச்சர்கள் 11 பேரில் 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள்; 9 அமைச்சர்கள் கோடீஸ்வரர்கள்

தொட்டியை சுத்தம் செய்த பிறகு, முதல்வன் திரைப்படத்தில் நடிகர் அர்ஜூனுக்கு செய்யப்படுவது போல, ஹசீப்-உல்-ஹசன்மீது அவரது ஆதரவாளர்கள் பாலை ஊற்றுகிறார்கள். அதுவும் காணொளியில் இடம்பெற்றுள்ளது.

இணையத்தில் இக்காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இது குறித்து பேசியுள்ள  ஹசீப்-உல்-ஹசன், “கழிவுநீர் வாய்க்கால் நிரம்பி வழிகிறது என அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பாஜக கவுன்சிலரும் பாஜக எம்எல்ஏ உதவி செய்யவில்லை. ஆகவே, நானே இறங்கி வேலை செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

Source: NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்