Aran Sei

‘க்ளப்ஹவுஸில் இஸ்லாமியப் பெண்கள் மீது அவதூறு: சட்டக்கல்லூரி மாணவர் கைது – பிணை வழங்கிய நீதிமன்றம்

க்ளப்ஹவுஸ் செயலியில் இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான யாஷ் குமார் என்ற சட்டக்கல்லூரி மாணவருக்கு உள்ளூர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 2) பிணை வழங்கியுள்ளது.

க்ளப்ஹவுஸில் இஸ்லாமிய பெண்கள் குறித்து அவதூறு பேச்சு: மூன்று பேரை கைது செய்த மும்பை காவல்துறை

ஜனவரி 20 அன்று நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு சட்டம் படித்து வரும் யாஷ் குமார் என்ற மாணவர் உட்பட ஹரியானாவைச் சேர்ந்த மேலும் 2 பேரை மும்பை குற்றப்பிரிவின் சைபர் காவல்துறையினர் கைது செய்தனர்.

இஸ்லாமியப் பெண்களுக்கு எதிராக ஆபாசமான கருத்துகள் கூறப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிளப்ஹவுஸ் ஆடியோ குழுவின் ஒருங்கிணைப்பாளர் குறித்த விவரங்களைத் தருமாறு க்ளப்ஹவுஸ் செயலி மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு டெல்லி காவல்துறை கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளது.

Source : PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்