நேற்று தீபாவளியை முன்னிட்டு வெடிக்கப்பட்ட பட்டாசால் ஏற்பட்ட காற்று மாசுபாட்டின் காரணமாக சென்னையில் உள்ள மக்கள் 45 சிகரெட் பிடித்த அளவுக்கு பாதிப்புக்குள்ளானதாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசு கள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டது.
நீட் தேர்வில் மோசடி- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் பட்டாசு புகை சூழ்ந்ததால் காற்று மாசு அதிகரித்தது. காற்று மாசின் அளவு 100ஐ கடந்தது. குறிப்பாக வடசென்னையில் மணலி உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசுபாடின் அளவு 344 என்றளவை எட்டியது. அதற்கு அடுத்தபடியாக நுங்கம்பாக்கத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 270க்கும் மேல் அதிகரித்தது.
Air Quality Index -AQI 50 இருந்தால் நல்ல காற்று,100 வரை இருந்தால் அது ஏற்றுக்கொள்ளத்தக்கது. ஆனால் சென்னையின் அளவு மிக மோசமாக இருந்தது. தமிழகத்தில் காற்று மாசுபாட்டின் அளவு:
மணலி – 344, நுங்கம்பாக்கம் -272, பொத்தேரி -151, அம்பத்தூர் – 150, சேலம் – 275, திருப்பூர் – 233, மதுரை -188, கோவை -178
தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் தான் காற்று மாசுபாட்டின் அளவும் குறைவாக இருந்தது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.