குடியரதினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது, செங்கோட்டையில் நடந்த வன்முறை தொடர்பான வழக்கில், நடிகர் தீப் சித்துவை டெல்லி காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி காவல்துறையின் சிறப்புக் குழுவால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணை காவல்துறை ஆணையர் (சிறப்பு குழு) சஞ்சீவ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
விவசாயிகள் பேரணி – சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ் மீது தேசதுரோக வழக்கு
குடியரசு தின டிராக்டர் பேரணியின்போது, காவல்துறை மற்றும் விவசாயிகளின் ஒரு பிரிவினரிடையே நடைபெற்ற மோதலுக்கு காரணமானவர்கள் எனக் குற்றம்சாட்டப்பட்டவர்களை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தீப் சித்து, அவரது இரு கூட்டாளிகள் மற்றும் செங்கோட்டையில் சீக்கியர்களின் புனித கொடியான ’நிசான் சாகிப்’ கொடி ஏற்றியதாகக் குற்றம்சாட்டப்படும் ஜுக்ராஜ் சிங் ஆகியோர் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது.
மேலும், போராட்டக்காரர்கள் எனக் கூறப்படும் ஜஜ்பீர் சிங், பூடா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூபாய் 50 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.