இந்தியாவின் ஆழ்கடல் பகுதி 4,371 உயிரினங்களுக்கு வசிப்பிடமாக உள்ளதாக இந்திய விலங்கியல் ஆய்வு மையம் (ZSI) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
ஆழ்கடல் பகுதி உயிர்சூழல் என்பது 200 மீட்டர் ஆழத்திற்கும் அதிகமாக உள்ள கடல் பகுதியாகும், இந்தப்பகுதியில் சூரிய ஒளி ஊடுருவ இயலாத கடல் பகுதி என்றும், இந்தியாவில் ஆழ்கடல் உயிரினங்கள் குறித்து நடந்த முழுமையான ஆய்வாகும் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
`மத்திய அரசு துரோகத்தை நிறுத்த வேண்டும்’ – தமிழ்நாடு மீனவத் தொழிலாளர் சங்கம்
மத்திய வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வானது, “இந்திய ஆழ்கடல் உயிரினங்களின் பன்மைத்துவம்” என்ற தலைப்பில் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை 5 ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர். மேலும் எண்ணற்ற பங்களிப்பாளர்கள் வழியாக 41 அத்தியாயங்களில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அரபிக்கடல், அந்தமான் கடல், வங்காள விரிகுடா மற்றும் லக்சத்தீவுகள் ஆகிய கடல்கள் சூழப்பட்டுள்ளன.
‘பிடுங்கப்பட்ட தீவுகளை மீனவப் பழங்குடிகளிடம் திருப்பிக் கொடுங்கள்’ – ஜோ டி குரூஸ்
அரபிக்கடல் ஆழ்கடல் பகுதியில் 2,766 உயிரினங்களும், வங்காள விரிகுடா ஆழ்கடல் பகுதியில் பகுதியில் 1,964 உயிரினங்களும், அந்தமான் ஆழ்கடல் பகுதியில் 1,396 உயிரினங்களும், லக்சத்தீவு ஆழ்கடல் பகுதியில் 253 உயிரினங்களும் உள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய ஆழ்கடல் பகுதியில் 31 கடல் பாலுட்டிகள் உள்ளதாகவும், இதில் மிக அழிவு நிலையில் உள்ள இறவாடி டால்பின்னும் அடங்கும் என்றும், இதே போன்று உலக நாடுகள் அழிவு நிலையில் உள்ளதாக அறிவித்துள்ள இந்தோ-பசிபிக் ஃபின்லெஸ் போர்போயிஸ் மற்றும் விந்து திமிங்கலம் ஆகியவையும் உள்ளதாகவும் அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
source; Deep Sea Faunal Diversity in India
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.