Aran Sei

நிர்ணயிக்கப்பட்ட வரியை விட 87.5 விழுக்காடு வரியை குறைத்து தாக்கல் செய்த ரிலையன்ஸ் – சட்டத்தின் ஓட்டைகள் பயன்படுத்தப்படுகிறதா?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கடந்த 2020 – 21 ஆம் நிதியாண்டில் 53,739 கோடி ரூபாய் லாபம் ஈட்டியிருக்கும் நிலையில், அதற்கான வரி மதிப்பீடான ரூ. 13,726 கோடி தொகைக்கு பதிலாக வெறும் ரூ. 1,722 கோடி ரூபாய் மட்டுமே வரியாக செலுத்தியுள்ளதாக தி இந்து பிஸினஸ்லைன்  இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறு வரியைக் குறைத்து காட்ட ரிலையன்ஸ் குழுமம் மூன்று உத்திகளை பயன்படுத்தி இருப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அரண்செய் யூடியூப் சேனலில் பதிலளித்துள்ள பொருளாதார அறிஞர் ஆனந்த் ஸ்ரீனிவாசன், “ரிலையன்ஸ் குழுமம் 3 உத்திகளை பயன்படுத்தி வரியைக் குறைத்து உள்ளது” என தெரிவித்தார்.

இந்தியாவில் இஸ்லாமியராக வாழ்வது குற்றமா? – ஹத்ராஸ் வழக்கும் அரசின் நடவடிக்கைகளும்

“அமெரிக்காவில் இயங்கி வரும் எரிவாயு நிறுவனத்தை மொத்தமாக ரிலையன்ஸ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே நட்டத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தை வாங்கி இருப்பதன் மூலம் ரூ. 33, 217 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பைக் காரணம் காட்டி வரியைக் குறைத்துள்ளது.” என அவர் கூறினார்.

“இரண்டாவதாக, ரிலையன்ஸ் குழுமத்தால் நடத்தப்படும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில், வர்த்தக லாபங்களை கணக்கில் எடுக்க வேண்டுமா அல்லது செலவீனங்களுக்கு பிறகான லாபத்தை கணக்கில் எடுக்க வேண்டுமா என தீர்ப்பாயத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதனால், அவர்களது வரி மிகவும் குறைந்துள்ளது.”என குறிப்பிட்டார்.

பழமையான மசூதி இடிக்கப்பட்டது குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகை நிறுவனம் – 2 பத்திரிகையாளர் மீது வழக்கு பதிந்த உத்தரபிரதேச அரசு

”மூன்றாவதாக, கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி 40 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.   ஒரு தனிநபர் பங்குகளை வாங்கி விற்றால் லாபத்தில் 20 விழுக்காடு வரியாக செலுத்த வேண்டும். கடந்த காலங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் 1.5 லட்சம் கோடிக்கு பங்குகளை விற்றுள்ளனர். ஆனால் இதனை ஆப்ஷனல் கன்வர்டிபிள் டிபன்சர் என்ற முறையில், விற்பனை செய்தால் ஒரு ரூபாய் கூட வரி கட்டாமல் விலக்கு பெற்றுள்ளனர்.” என ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

”ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல் தார்மீக அடிப்படையில் தவறு என்றாலும், சட்டப்படி அதில் தவறேதும் இல்லை. சட்டத்தில் கிடைக்கப்பெற்ற ஓட்டைளை பயன்படுத்தி அவர்கள் பலனடைந்துள்ளார். இது முதல் முறை அல்ல. மேலும் இது போன்று பல நிறுவனங்களும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு அந்த நிறுவனங்களை குறை கூற முடியாது, ஓட்டைகளை கொண்ட அரசாங்கத்தைத் தான் குறை சொல்ல வேண்டும்” என ஆனந்த ஸ்ரீனிவாசன் கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்