Aran Sei

விவசாயிகள் அழைப்புவிடுத்த முழு அடைப்பு – ஒன்றிணையும் தமிழகக் கட்சிகள்

விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருக்கும் பாரத் பந்த் முழு அடைப்பில் டிசம்பர் 8 ஆம் தேதி பங்கேற்று  வெற்றியடையச் செய்வோம் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக, இன்று (டிசம்பர் 6),  திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் : 8-ம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு

அந்த அறிக்கையில், “மாநில உரிமைகளைப் பறிக்கும், விவசாயிகளைக் கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கும், வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை, மாநில அரசின் மானியம் ஆகியவற்றைப் பறிக்கும், நெல்கொள்முதல் நிலையங்களை மூட வைக்கும், இந்திய உணவுப் பாதுகாப்பின் உயிர் மூச்சைப் பறித்து வேளாண்மையை அடியோடு அழிக்கும் இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறுவோம் என்றோ, அதன் பிறகு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றோ, மத்திய பாஜக அரசு கொள்கையளவில் ஒப்புக்கொள்ள முன்வரவில்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : பொது வேலை நிறுத்தத்திற்கு காங்கிரஸ் ஆதரவு

”நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைக்கும் வகையில், அவையில் நடைபெறும் வாக்கெடுப்பு முறைக்கே விரோதமாகச் சட்டங்களைக் கொண்டு வந்து விட்டு, ‘விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசாங்கத்திற்குள் கலந்து ஆலோசிக்க வேண்டும்’ என்று இன்னமும் மத்திய பாஜக அரசு சொல்லி இழுத்துக் கொண்டிருப்பது, விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மட்டுமின்றி, கரோனா நோய்த் தொற்று இருக்கின்ற இந்த நேரத்தில் அவர்களின் உயிருக்கும் ஆபத்து விளைவிப்பதாக இருக்கிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

விவசாயப் போராட்டம் : அரசு விருதை திருப்பித்தரும் ஒலிம்பிக் வீரர் விஜேந்தர் சிங்

பிரதமர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று, அதன் தலைமையில் பேச்சுவார்த்தை நேற்றைய தினம் நடத்தியும், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துனர் என்றும் தங்கள் கோபத்தைத் தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையிலேயே மவுன விரதமிருந்து, டிசம்பர் 8-ஆம் தேதி ‘பாரத் பந்த்’ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், “விவசாயிகள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கான மூலதனம், விவசாயத் தொழிலாளர்கள் சமூகக் கட்டமைப்பின் அசைக்கமுடியாத அஸ்திவாரம். இவர்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டமைத்து, நம்பிக்கையூட்டி, உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை தேடித்தரும் தளபதிகள்.” என்று அறிக்கையில் பாராட்டப்பட்டுள்ளது.

கமிட்டி போட்டு சாகடிக்க முயற்சி, “கருப்புச் சட்டங்களை ரத்து செய்க” – தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்

ஆகவே விவசாயிகள் முன்வைக்கும் ‘மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுங்கள்’ என்ற கோரிக்கை முழுக்க முழுக்க நியாயமானது என்றும் தொடர்ந்து இந்தச் சட்டங்களை எதிர்த்து வரும் அனைத்துக் கட்சித் தலைவர்களாகிய நாங்கள் அனைவரும் உறுதியாகக் கருதுகிறோம் என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”மூன்று சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற்று, தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற நாட்டில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் சார்பாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு, மத்திய அரசின் முன் வைத்துள்ள கோரிக்கைக்கு ஆதரவளித்து, டிசம்பர் 8-ம் தேதி, செவ்வாய்க்கிழமை அன்று நடத்த அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய முழு அடைப்புக்கு மனமார்ந்த ஆதரவு அளிக்கிறோம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விவசாயிகளின் போராட்டம் : விவசாய திருத்தச்சட்டம் பெரும் பயனளிக்கும் – மோடி

 

விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழத்தில் இருந்து கிளம்பும் இந்த ஆதரவுக் குரல், அறவழியில் போராடும் விவசாயிகளுக்கு எழுச்சிக் குரலாக, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் துணை நிற்கும் குரலாக இருக்கட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், “ தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், அனைத்து எதிர்க்கட்சிகள், தொழிற்சங்கங்கள், சமூகநல அமைப்புகள்,மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் அமோக ஆதரவளித்து, ‘பாரத் பந்த்’தை வெற்றி பெறச் செய்திட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்”. என்று தெரிவித்துள்ளது.

விவசாயிகள் போராட்டம் : பத்ம விபூஷன் விருதைத் திருப்பித் தர முடிவு – பஞ்சாப் முன்னாள் முதல்வர்

 

டிசம்பர் 8 ஆம் தேதி பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று (டிசம்பர் 5) தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாநில உரிமைகளைப் பறிக்கும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளின் கொத்தடிமைகளாக்கும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பாஜக அரசு முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

செவிடன் காதில் சங்கு ஊதியது போன்று இராமல், விவசாயிகளின்  கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்று விமர்சித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்: அமித் மால்வியாவின் ஆதாரமற்ற அவதூறுகள்

 

விவசாயிகளின் இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களின் நலனைப் பாதுகாக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்