Aran Sei

ராமநாதபுரம் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் நிறுத்திவைப்பு – சு.வெங்கடேசன் நடவடிக்கை

ராமநாதபுரம் மீனவர் கிராமத்தில் மீனவர் நிவாரண தொகையில் கடன் பிடித்தம் செய்து வந்த வங்கிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தலையீடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாடு அரசு மீனவர்களுக்கு வழங்கிய மழைக் கால நிவாரணத்தில் கல்விக் கடன், நகைக் கடன் பிடித்தங்கள் வங்கி கிளைகளில் செய்யப்படுவதாக வந்த புகார்களை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  வங்கி அதிகாரிகள் இடம் பேசியதில் அத்தகைய பிடித்தம் செய்யப்படாது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை தாக்கியதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு – கைது செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம்

இத்தகைய பிடித்தங்கள் இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் செய்யப்படுவதாக ஒரு மீனவர் சு. வெங்கடேசன் சமூக வலைத் தளக் கணக்கில் பதிவிட்டு இருந்தார். உடனடியாக வங்கியின் மண்டல அதிகாரிகள் இடம் பேசியதில் அத்தகைய பிடித்தங்களை நிருத்துவதாகவும், பிடித்த பணத்தை மறு வரவு செய்வதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

‘எல்பிஜி சிலிண்டர் விலையையும் குறைக்க வேண்டும்’- ஒன்றிய அரசிற்கு மேனகா காந்தி கோரிக்கை

இது குறித்து தன்னுடைய ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ள சு.வெங்கடேசன், “கந்து வட்டிக் காரர்களின் மன நிலை. அரசு வங்கிகளுக்கு கூடாது என்று பேசினேன். இது மீனவர்களின் உடனடி அன்றாட வாழ்க்கை செலவுகளுக்காக அரசால் தரப்படுவது ஆகும். இதைப் பிடித்தம் செய்து விட்டால் அப்படி ஏழை எளிய மீனவ மக்கள் வாழ்க்கையை ஓட்ட முடியும்? எல்லா வங்கிகளும் இதை கருத்தில் கொள்ள வேண்டும். வேறு எந்த மீனவ கிராமங்களில் வழங்கப்பட்ட நிவாரணம் இவ்வாறு பிடித்தம் செய்யப்பட்டு இருந்தால் அதுவும் மறு வரவு வைக்கப்பட வேண்டும். அதற்கான உரிய அறிவுறுத்தல்கள் அனைத்து வங்கி கிளைகளுக்கும் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகங்களால் உடன் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்