Aran Sei

கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடாது – உயர் நீதிமன்ற மதுரை கிளை

Image Credits: Live Law

ணையத்தளம் வழியாகக் கடன் வழங்கி அதனை வசூலிக்க மூன்றாம்தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “வளர்ந்து வரும் நவீன காலத்தில் கைபேசி அனைவரும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. கைபேசி மூலமாகக் கடன் பெறுவதற்காகப் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலிகள் ரிசர்வ் வாங்கி அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

“இந்தியப் பொருளாதாரம் மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும் ” – ஆக்ஸ்ஃபோர்ட் எகனாமிக்ஸ்

“இது போன்று கடன் பெறுவதற்கு பல்வேறு செயலிகள் புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காகப் பல்வேறு விளம்பரங்கள், கைபேசி மூலம் செய்ய வருகின்றன. கைபேசி செயலி மூலம் கடன் பெறுபவர்களுக்கு அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது. செல்போன் செயலிகளில் கடன் தரும் அவர்கள் எந்தவிதமான சட்ட திட்டங்களையும் பின்பற்றுவதில்லை” என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இதன் காரணமாகக் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு செல்கின்றனர். கூகுள் மூலம் பஜாஜ்பின்சர்வ், கேப்பிடல் ஃபர்ஸ்ட், கேஸ் இ, ஸ்மார்ட் காயின் உட்பட 50க்கும் மேற்பட்ட செயலிகள்  கடன்களை வழங்கி வருகின்றனர். இவர்கள் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இந்தச் செயலியில் கடன் பெற்ற ஆந்திராவை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். தமிழகம், ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களில் செயலி மூலம் கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. கடன் வழங்கும் பல செயலிகள் சீனா நாடு மறைமுகமாகச் செயல்படுவது தெரிய வருகிறது. இவர்கள் இந்தியாவில் உள்ள சிலர் மூலம் வங்கி பரிவர்த்தனைகளில் மறைமுகமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

“ரிசர்வ் வங்கி இணையதளம் மற்றும் செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல், இது போன்ற சட்ட விரோதமாகச் செயல்படும் செயலிகளுக்குத் தடை விதிக்க நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி ஆன்லைன் ரம்மி போன்று தற்போது இந்தக் கடன் வழங்கும் செயலிகள் அதிகரித்து வருகின்றது என்று கூறியுள்ளார். இதனால் இளைஞர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் தற்போது தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பல்வேறு தற்கொலைகள் நடந்து வருகின்றது எனவே சட்டவிரோதமாக நடைபெற்று வரும் இந்தப் பண பரிமாற்ற பரிவர்த்தனைகளை நீதிமன்றம் தடை செய்ய வேண்டும் என வாதிட்டுள்ளார்.

அப்போது. நீதிபதிகள் “தற்போது, செயலி மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது இது வருத்தத்திற்கு உரியது” என்று கூறியுள்ளனர்.

அநீதியை எதிர்த்து நிற்கும் குடிமகனே இந்த ஆண்டின் சிறந்த இந்தியன் – சித்தார்த் பாட்டியா

“கடனை வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை முன்னெடுப்பதை ஏற்க முடியாது. கடன் செயலிகள் மூலம் கடனை வசூலிப்பதற்காக அங்கீகரிக்க முடியாத முறையைப் பின்பற்றுகின்றனர். கடனை வசூலிக்கும் முறைகள் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதில்லை. இந்த வழக்கு தொடர்பாக மத்திய நிதித்துறை செயலாளர், ரிசர்வ் வங்கி மற்றும் கூகுள் நிறுவனம் பதில் அளிக்க வேண்டும்” என்றும் கூறி நீதிபதிகள் இந்த வழக்கை ஒத்திவைத்தனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்