Aran Sei

கொரோனா தொடர்புடைய சிக்கல்களால் ஏற்படும் உயிரிழப்புகள் – கொரோனா இறப்பு என சான்றளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

credits : the indian express

கொரோனா தொடர்புடையை சிக்கல்களால் ஏற்படும் இறப்புகளுக்கும் கொரோனா இறப்புகள் என சான்றிதழ் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நோய் கண்டறியப்பட்ட ஒன்றிரண்டு மாதம் கழித்து கொரோனா சிக்கல்களால் உயிரிழந்தவர்களுக்கும் மற்றும் நோயாளிகள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ உயிரிழந்தால் கூட இது பொருந்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லி கலவரத்துடன் தொடர்புடைய கொலை வழக்கு – குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு பிணை வழங்கிய டெல்லி நீதிமன்றம்

”மரணத்திற்கான உண்மையான காரணம் எனக்கூறி, கொரோனா மரணம் என அதிகாரப்பூர்வ ஆவணம் அல்லது இறப்பு சான்றிதழ் வழங்கும் எளிமையாக்கப்பட்ட நடைமுறையை ஒன்றிய அரசு ஏற்படுத்த வேண்டும்” என நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.

”கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கத்தால் அறிவிக்கக்கூடிய திட்டங்களின் நன்மைகளை பெறுவதில் எந்த சிக்கலும் ஏற்படாத வகையில், மரணத்திற்கான சரியான காரணத்தைக் குறிப்பிட்டு அதிகாரப்பூர்வ ஆவணம் அல்லது இறப்பு சான்றிதழ் வழங்க வேண்டியது சம்பந்தப்பட்ட அதிகாரியின் கடமை” என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கெதிராகப் போராடும் விவசாயிகளுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் – போராட்டத்தை நிறுத்த அரசு முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

இறப்பு சான்றிதழ்களில் மரணத்திற்கான காரணம் சரியாக குறிப்பிடாத பட்சத்தில், நோயாளிகளின் குடும்பங்களுக்குக் குறைதீர்க்கும் செயல்முறைகள் அல்லது வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் கொரோனா என குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்படாத பட்சத்தில், உயிரிழப்புகள் எண்ணிக்கையைச் சரியாக அறிய முடியாது என்ற மனுதாரரின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றது.

மாநிலங்களுக்குப் பயனளிக்காத ஜிஎஸ்டி; பரிசீலனை செய்ய இதுவே நேரம் – தாமஸ் ஐசக்

”கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைக் குறைத்து காட்டும் பட்சத்தில், மக்கள் தவறாக வழிநடப்படுவார்கள். அவரக்ள் அலட்சியமாக இருப்பார்கள். எனவே, மரணத்திற்கான சரியான காரணத்துடன் இறப்பு சான்றிதழ் வழங்குவது பொது நலனிற்கும் உகந்தது” என மனுதாரர் வைத்த வாதங்களை நீதிமன்றம் தீர்ப்பில் பதிவு செய்துள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்