Aran Sei

‘கொரோனா தொடர்பான உயிரிழப்புகளை துல்லியமாக அறிவிக்க வேண்டும்’ – தமிழக அரசை அறிவுறுத்திய உயர்நீதிமன்றம்

Image Credits: The Hindu

கொரோனா தொடர்பான அனைத்து உயிரிழப்புகளையும் துல்லியமாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இறப்புகளை பதிவு செய்வதில் ஒரு பயனுல்ல கொள்கையை வகுக்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் அடங்கிய அமர்வு இதனை கூறியுள்ளது.

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

அனைத்து இறப்புகளும் முறையாக பதிவு செய்யப்படவில்லை என்ற குறைபாடு நாடு முழுவதும் உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், ”இறப்பு பதிவுகளை பதிவு செய்வதன் வழியாக நோய்த்தொற்றின் தீவிரத்தை புரிந்து கொண்டு தடுக்க முடியும்.மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உதவிகள் கிடைக்க வழி செய்யலாம்” என தெரிவித்துள்ளனர்.

கொரோனா தொடர்பான அனைத்து உயிரிழப்புகளிலும், சட்ட விதிகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் மற்றும் சர்வதேச தரநிலைகள் அனைத்தையும் பின்பற்றி இறப்பு சான்றிதழ்களில் மரணத்திற்கான முறையான, சரியான காரணம் குறிப்பிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

காவிரி டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியை தடுத்திட வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

உயிரிழப்புகளை துல்லியமாக பதிவு செய்வது, “எதிர்காலத்தில் தொற்றுநோயைச் சமாளிக்க மேற்கொள்ளப்படும் ஆய்வுக்கு உதவும் என்றாலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்று சான்றிதழ் வழங்கவில்லை என்றால் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் கிடைக்காது என்பதே முதன்மையான கவலை” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொரோனா இறப்புகளை கணக்கெடுக்காவிட்டால் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் அடிப்படையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் நிவாரணம் மறுக்கப்படும் பட்சத்தில், தேவைப்பட்டால் ஏற்கனவே வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ்களை திருத்தியமைக்க வேண்டும் என்பது பொருத்தமானதாக இருக்கும்” என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

மனுமீதான விரிவான விசாரணை ஜூன் 28ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும், அதற்குள் மத்திய, மாநில அரசுகளின் பூர்வாங்க பதில்கள் கிடைக்கும் என நம்புவதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்