அரசின் கருணையை எதிர்பார்த்தவருக்கு மரணமே சிறையிலிருந்து விடுதலை அளித்துள்ளது என்று வீரப்பனின் அண்ணன் மாதையன் மரணம் குறித்து எஸ்.டி.பி.ஐ. கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மற்றும் சேலம் மத்திய சிறைகளில் 35 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த வீரப்பன் அண்ணன் மாதையன் (வயது 85) உடல்நலக் குறைவின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த காரணத்தாலும், முதுமை மற்றும் இருதய நோய், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும், தமிழக அரசு மாதையனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆர்வலர்களும், எஸ்.டி.பி.ஐ. கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், 35 ஆண்டு காலம் சிறைகளில் கழித்து, தள்ளாடும் வயதில் நோய்வாய்ப்பட்டு, கடைசி காலத்திலாவது குடும்பத்தினருடன் இருக்க விரும்பிய மாதையனை மரணம் மட்டுமே அவரை சிறையிலிருந்து விடுதலை செய்துள்ளது.
தமிழக சிறைகளில் இதுபோன்று வயது முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட ஏராளமான சிறைவாசிகள் உள்ளனர். குறிப்பாக ஆயுள் சிறைவாசி முதியவர் கோவை பாஷா போன்றவர்கள் அரசின் கருணையை எதிர்பார்த்த வண்ணமாக உள்ளனர். ஆகவே, தமிழக அரசு கருணை அடிப்படையில் இத்தகைய சிறைவாசிகளை பாரபட்சமின்றி விரைவில் விடுதலை செய்ய முன்வர வேண்டும் எனவும், குறைந்தபட்சம் இத்தகைய சிறைவாசிகளுக்கு நீண்ட நாள் பரோல் அல்லது பிணை வழங்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இளவரசு கிட்ட 20 அறை வாங்குனேன் Bigg Boss Suresh Chakravarthy Interview
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.