Aran Sei

கும்பமேளாவில் பங்கேற்ற பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் – கொரோனா தொற்றால் உயிரிழப்பு

ம்முவில் பாஜக பிரமுகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தாக்கூர் பூரன் சிங் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளதாக ரஜோரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஜோரி மாவட்டம் கேவல் பகுதியைச் சேர்ந்த தாக்கூர் பூரன் சிங் அண்மையில் கும்பமேளாவில் பங்கேற்று திரும்பதாக கட்சி வட்டாரத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

’கடன் வாங்கியோ, பிச்சை எடுத்தோ, திருடியோ ஆக்சிஜனை உறுதி செய்ய வேண்டியது உங்கள் பொறுப்பு’ – மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

தாக்கூரின் உடலைத் தகனம் செய்யும்போது முறையான கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

”உடல் நேரடியாக தகனப்படுத்திக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இறுதி  சடங்குகளை மேற்கொள்ளப் பி.பி.ஈ கிட் உள்ளிட்ட முறையான கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி 4 உறவினர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்” என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்