Aran Sei

தேசிய பணமாக்கல் திட்டம் என்பது ஒரு ’பகல் கொள்ளை’ – முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் விமர்சனம்

credits : the indian express

ன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் ஒரு ‘பகல் கொள்ளை’ என முன்னாள் நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

கோவா சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பார்வையாளராக நியமிக்கப்பிட்டிருக்கும் ப. சிதம்பரம், பனாஜியில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் இரண்டு நாள் நிர்வாக கூட்டத்திற்கு பிறகு இதனை குறிப்பிட்டுள்ளார்.

”ஒன்றிய அரசின் ‘தேசிய பணமாக்கல் திட்டம்’ ஒரு பகல் கொள்ளை. கடந்த 70 ஆண்டுகளாக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது அனைத்தும், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரின் கைகளில் வழங்கப்படுகிறது. மக்கள் இந்த ஆபத்தை அறிந்து, இதனை எதிர்க்க வேண்டும்” என கூறினார்.

இந்தக் கொள்கை முடிவில் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை எனக் கூறிய அவர், “நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. இந்த விவகாரத்தில், அரசு எந்த விவாதத்தையும் அனுமதிக்காது” என அவர் கூறினார்.

Source : NDTV

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்