Aran Sei

‘பாலியல் சீண்டல் புகாரைக் கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகம்’ – பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க தயாநிதி மாறன் வேண்டுகோள்

த்மா சேஷாத்ரி பால பவன் (பிஎஸ்பிபி) பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்த விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மத்திய கல்வி அமைச்சர் ஆர்.பி.நிஷாங்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், “மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர்மீது உடனடியாக முறையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும், மாணவர்கள் முன்னரே அளித்த புகாரைப் புறக்கணித்த பள்ளி நிர்வாகம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஆசிரியர் மீது புகார்: போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க முன்னாள் மாணவர்கள் வேண்டுகோள்

மேலும், பிஎஸ்பிபி பள்ளியின் வணிகவியல் (Commerce) ஆசிரியர் கே.கே.ராஜகோபாலன் எண்ணற்ற மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது, மாணவர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக தயாநிதி மாறன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாது, 1997 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற வழங்கிய பாலின சமத்துவத்திற்கான மனிதஉரிமை மற்றும் பணியிடங்களிலும், பள்ளிகளிலும் பாலியல் தொல்லைக்கு எதிரான வழிகாட்டுதல்களையும், 2012 ஆம் ஆண்டு போக்ஸோ சட்டத்தில் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் ஆகிய எந்த நெறிமுறைகளின் அடிப்படையிலும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கத்தில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிஆர்பிஎப் காவலர் – ” போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யாதது ஏன்? “

இந்நிலையில், பள்ளி ஆசிரியர்மீதும் , நடவடிக்கை எடுக்கத் தவறிய பள்ளி நிர்வாகிகள்மீதும் விசாரணைக்கு உத்தரவிட்டு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மத்திய கல்வி அமைச்சர் ஆர்.பி.நிஷாங்க்கு எழுதியுள்ளக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்