Aran Sei

இந்துத்துவ கும்பலால் தாக்குதலுக்குள்ளான வளையல் வியாபாரி – பெண்களை துன்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்த மத்திய பிரதேச காவல்துறை

 

த்திய பிரதேசம் மாநில இந்தூரில், இந்துத்துவ கும்பலால் தாக்குதலுக்குள்ளான 25 வயதான வளையல் வியாபாரி தஸ்லீம் அலியை, பெண்களைத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பெயரில் மத்திய பிரதேச காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தூர் பகுதியில் வளையல் வியாபாரம் செய்து வரும் தஸ்லீம் அலி, ராக்கியை முன்னிட்டு வளையல் விற்பதாக கூறி இந்துத்துவ கும்பலால் தாக்கப்பட்டார்.

அவர் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதை அடுத்து தாக்குதலுக்குக் காரணமானவர்கள் என மூன்று பேரைக் காவல்துறையினர் திங்களன்று (ஆகஸ்ட் 23) கைது செய்தனர்.

இந்நிலையில், பெண்களைத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் கீழ் தஸ்லீம் அலி கைது செய்யப்பட்டிருப்பதாக இந்தூர் கிழக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சஷிகாந்த் கங்கணே தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தஸ்லீம் அலியைக் காண முடியவில்லை எனக் கூறிய அவரது  தம்பி ஜமால் அலி, “நாங்கள் காவல் நிலையத்திற்கு சென்றோம். ஆனால் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. சிறிது நேரம் காத்திருந்த பின்னர், அங்கு யாரை அணுகுவது என்று எங்களுக்குத் தெரியாதததால் திரும்பி வந்துவிட்டோம்” தெரிவித்தார்.

இந்தூர் காவல் தலைமையகத்தை முற்றுகையிட்ட இந்து ஜாக்ரான் மஞ்ச் அமைப்பினர், மாவட்டத்தில் அதிகரித்து வரும் ‘தேச விரோத’ செயல்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டை மறுத்த இந்தூர் காவல்துறை தலைமை இயக்குநர் மணிஷ் கபூரியா, காவல்துறை நிர்வாகம் சட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும், சட்டத்திற்கு புறம்பான செயல்களை யார் செய்தாலும் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என கூறினார்.

Source : The Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்