முன்னாள் மற்றும் தற்போது பணியிலுள்ள, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 ன் கீழ் 122 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் அமலாக்கதுறை இயக்குனரகத்தால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையை சமர்பித்த மூத்த வழக்கறிஞர் விஜய் ஹசாரியா தெரிவித்துள்ளார்.
இதில் 51 வழக்குகள் முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும், 71 வழக்குகள் சட்ட மேலவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதும் பதியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
முன்னாள் மற்றும் தற்போது பணியிலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விரைவாக விசாரிக்கும் வகையில் சிறப்புநீதிமன்றம் அமைப்பது குறித்து மூத்த வழக்கறிஞர் விஜய் ஹசாரியா இந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
மேலும், 51 முன்னாள் மற்றும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 112 சட்ட மேலவை மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது 121 சி.பி.ஐ வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.
இதில் 58 வழக்குகள் ஆயுள் தண்டனைக்குற்றங்களாகும்.
மேலும், இந்த அறிக்கை அமலாக்கத்துறை சில விசாரணைகளில் காலம் தாழ்த்தியதையும் மற்றும் டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் ஜூன் 2018 மற்றும் அக்டோபர் 2018 இல் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு புகார்களின் வழக்கு இன்றுவரை விசாரணையை கூட எடுக்கவில்லை என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
source: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.