Aran Sei

ஆப்கானில் கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் – சிறந்த பத்திரிகையாளரென்று விருது அறிவித்த மும்பை பத்திரிகையாளர் மன்றம்

ந்த ஜூலை மாதம் ஆப்கானிஸ்தானில் ஊடகப்பணியின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக்கை, இந்த ஆண்டின் சிறந்த பத்திரிகையாளராக மும்பை பத்திரிகையாளர் மன்றம் தேர்வு செய்துள்ளது.

ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினை, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு போராட்டங்கள், கொரோனா ஏற்படுத்திய புலம்பெயர்ந்தலும் உயர்பலிகளும் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் போன்றவை குறித்தான வீரியமும் ஆழமுமிக்க புகைப்படங்களுக்காக டேனிஷ் சித்திக் அறியப்படுகிறார்.

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பிரேம் ஷங்கர் ஜாவுக்கு வாழ்நாள் சாதனைக்கான ரெட்இங்க் விருதை மும்பை பத்திரிகையாளர் மன்றம் வழங்கியுள்ளது.

பல முக்கிய நாளிதழ்களிலும் இதழ்களிலும் தலையங்க ஆசிரியர் பொறுப்பை வகித்ததோடு, காஷ்மீர், சீனா போன்றவை குறித்து பத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களையும் பிரேம் ஷங்கர் ஜா எழுதியுள்ளார்.

இவ்விரு விருதுகளோடு, 12 பிரிவுகளின் கீழ் 24 விருதுகளும், நாளை(டிசம்பர் 29) இணையவழியில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் வழங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில், இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணா பங்கேற்று, சிறப்புரை ஆற்றவுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்