Aran Sei

டேனிஷ் ஆசாத் அன்சாரி: யோகியின் அமைச்சரவையில் இடம்பெற்ற இஸ்லாமிய அமைச்சர்

த்திரபிரதேசத்தின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக டேனிஷ் ஆசாத் அன்சாரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மாநிலத்தின் ஒரே ஒரு இஸ்லாமிய அமைச்சர் இவர்தான். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் 52 அமைச்சர்களில் ஒருவராக டேனிஷ் ஆசாத் அன்சாரி நேற்று(மார்க் 25) பதவி ஏற்றுக்கொண்டார்.

உ.பி தேர்தல்: 50% எம்.எல்.ஏக்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன – ஆய்வில் தகவல்

உத்தரபிரதேசத்தில் ஒரு இஸ்லாமியரான நான் அமைச்சராவது சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சிகளுக்கு பலத்த அடி என்று டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறியுள்ளார்.

2017 தேர்தலைப் போலவே அண்மையில் நடந்து முடிந்த 2022 தேர்தலிலும் பாஜக எந்த இஸ்லாமிய வேட்பாளர்களையும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரப்பிரதேசத்தின் பாஜக அரசின் ஒவ்வொரு திட்டத்திலும் இஸ்லாமியர்கள் பலன் பெற்றுள்ளனர். ஆதலால் பாஜக மீது இஸ்லாமியர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்று டேனிஷ் ஆசாத் அன்சாரி கூறியுள்ளார்.

உ.பி., தேர்தல் முடிவுகள்: மதரீதியாக பிரிந்த இந்து, இஸ்லாமியர் வாக்குகள்

பல்வேறு நலத்திட்டங்களை பாஜக அமல்படுத்தி வருகின்றது. அத்தகைய திட்டங்களைப் பெறுவதற்கு இந்த அரசு யாரிடமும் சாதி, மதம் கேட்பதில்லை. இஸ்லாமியர்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளுக்காக பாஜக போராடுகிறது.

உத்தரபிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்ட பாஜக அரசில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய மொஹ்சின் ராசா, பாஜகவின் ஒரே முகமாக இருந்தார். இப்போது மொஹ்சின் இடத்தை டேனிஷ் ஆசாத் அன்சாரி பிடித்துள்ளார்.

உ.பி.,யில் இஸ்லாமியர்களை அவதூறாக பேசிய பாஜக வேட்பாளர் – விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

32 வயதான டேனிஷ் ஆசாத் அன்சாரி, பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் பணியாற்றியவர். அண்மையில் நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு இவர், பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்