Aran Sei

கழுத்தறுத்து கொல்லப்பட்ட பத்திரிகையாளர் : குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்த பாகிஸ்தான் நீதிமன்றம்

மெரிக்க பத்திரிக்கையாளர் டேனியல் பேர்ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஒமர் சயீத் ஷேக் என்பவரை பாகிஸ்தான் நீதிமன்றம் விடுதலை செய்திருப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ( The Wall Street Journal ) பத்திரிக்கையின் தெற்காசிய செய்தியாளராக இருந்த டேனியல் பேர்ல்(38), 2002 ஆம் கராச்சியில் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஒமர் சயீத் ஷேக், கடந்த பதினெட்டு வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம், சிந்த் மாகாண உயர் நீதிமன்றம், ஷேக் மற்றும் அதே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஃபஹத் நசீம், ஷேக் ஆதில் மற்றும் சல்மான் சாகிப் ஆகியோரின் மேல்முறையீடுகளை விசாரித்து,  ஷேக்கிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏழு வருடங்களாக குறைத்து இரண்டு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்தது. ஷேக் பதினெட்டு வருடங்கள் சிறையில் செலவிட்டதால், ஏழு வருடம் காலம் அதிலிருந்து கழிக்கப்பட்டது.

ஈராக், ஆப்கானிஸ்தான் – அமெரிக்க படைகளை திரும்பப் பெறுகிறார் ட்ரம்ப்

சிந்த் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும், பாகிஸ்தான் மத்திய அரசும் வரவேற்கவில்லை. சிந்த் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டேனியல் பேர்லின் பெற்றோர் செய்த மேல்முறையீட்டை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, ஷேக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று ஆணையிட்டது என்று தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று சிந்த் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, ஷேக் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மூவர் பதிவு செய்த மேல் முறையீட்டை விசாரிக்கும் போது “ இவர்கள் எந்த குற்றமும் செய்யாமல் பதினெட்டு வருடங்களாக சிறையில் இருக்கிறார்கள்” என்று கூறி ஷேக்கை விடுதலை செய்துள்ளார் என்கிறது இந்துஸ்தான் டைம்ஸ். இதனால், ஷேக் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் ரத்தாகின்றன. விடுதலை செய்து தீர்ப்பளித்த பிறகு, ஷேக் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட மற்ற மூன்று பேரும் பாகிஸ்தானை விட்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

26/11 மும்பைத் தாக்குதலைத் தடுத்திருக்க முடியுமா? – விடை வேண்டி நிற்கும் கேள்விகள்

இங்கிலாந்து குடியுரிமை கொண்ட ஷேக், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய விமானம் ஒன்றை காத்மண்டுவில் இருந்து கடத்தி காந்தகருக்கு கொண்டு சென்ற போது, பயணிகளை மீட்பதற்கு ஜெய்ஷ்-இ-மொஹமது அமைப்பை தொடங்கிய மசூத் அஸர், பயங்கரவாதி முஸ்தக் அஹ்மது ஸர்கர் மற்றும் ஷேக்கை இந்திய அரசு விடுதலை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்