Aran Sei

வாக்காளர் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்கும் தேர்தல் ஆணையம்- 5௦௦க்கும் மேற்பட்ட சமூகசெயற்பாட்டாளர்கள் கண்டனம்

 வாக்காளர் அடையாள அட்டையை  ஆதார் அட்டையுடன் இணைக்கும்  தேர்தல் ஆணையத்தின் முடிவைத் திரும்பப் பெற வேண்டுமென 5௦௦ க்கும் மேற்பட்ட சமூகசெயற்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும் கோரியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள்  எழுதியுள்ளக் கடிதத்தில்,   தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவானது  தவறான சிந்தனை, நியாயமற்றது என்றும், மேலும்,  இது இந்திய  தேர்தல் ஜனநாயகக் கட்டமைப்பைச் சிதைக்கும்   தேவையற்ற நடவடிக்கை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – குற்ற ஆவணக்காப்பகம் அறிக்கை

மேலும், இந்தக் கடிதத்தில் தேர்தல் சீர்திருத்தக் குழு , ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம்; சிவில் உரிமைகள் மக்கள் சங்கம், எம்.கே.எஸ்.எஸ், ஆதிவாசி மகளிர் நெட்வொர்க், சேத்னா அந்தோலன் மற்றும் என்.ஏபி.எம் ஜார்க்கண்ட் மற்றும் டிஜிட்டல் உரிமைக் குழுக்கள், மறுபரிசீலனை ஆதார், ஆர்டிக்கிள்  21 அறக்கட்டளை, இணைய சுதந்திர அறக்கட்டளை, பச்சாவோ திட்டம் மற்றும் இந்தியாவின் இலவச மென்பொருள் இயக்கம் போன்ற  23 அமைப்புகள் கையெழுதிட்டுள்ளன.

இதே போன்று,  முன்னாள் குடிமைப் பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பட்டாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் என  ஏறத்தாழ 5௦௦க்கும் மேற்பட்டவர்களும் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டு அனுப்பியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “பொறுப்பான நிர்வாகத்தினை   தொழிற்நுட்பத் தீர்வுகள் மாற்றிவிட  முடியாது. வாக்காளர் தகவல்களை உறுதிபடுத்த வீட்டுக்கு வீட்டுக்குச் சென்று மேற்கொள்ளப்படும் ஆய்வு என்பது  வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், வாக்காளர் தகவல்களின் துல்லியத்தை உறுதிபடுத்துவதற்கும்    திறனுள்ள முறையாகும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜெர்மனியில் வெற்றி முகத்தில் சமூக ஜனநாயக கட்சி – நான்காம் இடத்திற்கு தள்ளபட்ட வலதுசாரிகள்

 

மேலும், தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவானது, புட்டாசுவாமி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரானது என்று  சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதார் அட்டைக் கட்டயமக்கப்படுவது  குறித்து  புட்டாசுவாமி தாக்கல் செய்த பொதுநல மனுவில்,  “அரசு வழங்கும் சேவைகளைப் பெற ஆதார் அட்டை அவசியம் என்று  மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களை   கட்டாயப்படுத்தக் கூடாது” என்று உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SOURCE: THE WIRE 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்