Aran Sei

ரஷ்யாவுடன் போர் சூழும் ஆபத்து – விமான நிலயங்களை மூடிய உக்ரைன்

ஷ்யாவுடனான மோதல் காரணமாக கிழக்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்களை நள்ளிரவு முதல் காலை 7 மணி வரை உக்ரைன் அரசு  மூடியுள்ளது.

நேட்டோவின் நட்பு நாடுகள் பட்டியலில் உக்ரைன் இடம்பிடித்துள்ளது. உக்ரைனில் அமெரிக்காவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்று பல விதங்களில் ஆபத்தானது என்று ரஷ்யா கருதுகிறது. இதுதான் தற்போது விவகாரமாக மாறியுள்ளது.

பக்கத்து நாடான உக்ரைனை அமெரிக்காவுடன் உறவு கொள்ள ரஷ்யா விரும்பவில்லை. உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்துவிடுமோ என்று உக்ரேன் பிரதமர் அச்சம் தெரிவித்துள்ளார் .  இதனால் அதிகரித்துவரும் போர்ச்சூழல் காரணமாக, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் உக்ரேனில் வசித்துவரும் பிற நாட்டு மக்கள் வெளியேறிவிட்டனர். முன்னதாக, ரஷ்யா – உக்ரேன் நாட்டின் எல்லையில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்து விட்டன. அதனால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்து சூழலாம் என்ற நிலைமை ஏற்பட்டு வந்து வந்த நிலையில், அதற்கான சூழல்தான் இப்போது உருவாகி உள்ளது.

மத ரீதியிலான ஆடைகள் அணிய மானவர்களுக்குத்தான் இடைக்காலத் தடை, ஆசிரியர்களுக்கு அல்ல – கர்நாடக உயர்நீதிமன்றம் விளக்கம்

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டுனெட்ஸ் மற்றும் லுகன்ஸ் பகுதிகளை தன்னாட்சி நகரங்களாக ரஷ்யா நேற்று முன்தினம் அங்கீகரித்திருந்தது. அங்கு படைகளை களமிறக்க அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டதால், ரஷ்யா தனது படைகளை அந்த பகுதியில் நிலைநிறுத்தியது. உக்ரைன் மக்களும் உக்ரைன் அரசாங்கமும் அமைதியை விரும்புகின்றனர் என்று உக்ரைன் பிரதமர் கூறியுள்ளார். மேலும், நாடு தாக்குதலுக்கு உட்பட்டால், நாங்கள் போராடுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இப்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன… உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கிலோ மீட்டர் தொலைவில்தான் இந்த ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, எந்த நேரத்திலும் போர் மூளும் ஆபத்து உருவாகியுள்ளது. அதனால்தான், உடனடியாக உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

டெல்லி: ஹிஜாப் அணிந்ததால் வகுப்புக்குள் அனுமதி மறுக்கப்பட்ட 6 வகுப்பு மாணவி

உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி, இந்த அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார். டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும்… இந்த உத்தரவானது, 30 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் அதன்பின்பு நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைன் பாதுகாப்பு கவுன்சிலானது, அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மற்றொரு பக்கம், ரஷ்யாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை, கூடிய சீக்கிரம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றும் உக்ரேன் அரசு தெரிவித்துள்ளது.

இந்த போரை நிறுத்தி பேச்சு வார்த்தைக்கு வருமாறு உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா கடைசியாக வேண்டுகோள் \விடுத்துள்ளார்.. காரணம், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தவோ, போர் தொடுக்கவோ உக்ரைனுக்கு எந்தவிதமான எண்ணமில்லை என்று அவர் தெளிவாக தெரிவித்துள்ளார்.. அதுமட்டுமல்ல, ஒருவேளை இரு நாடுகளுக்கும் போர் நடந்துவிட்டால், அது 2-ம் உலக போருக்கு பிறகு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்றும், மக்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை என்பது தலைவிரித்தாடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்