Aran Sei

திமுகவை கைவிட்டனரா இடைசாதிகள்?; வெற்றிக்கு வித்திட்ட தலித் மற்றும் சிறுபான்மையினர் – தி இந்து

திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றிக்கு தலித்துகள், சிறுபான்மையினர்கள் மற்றும் உயர் சாதியினர்கள் பெரும் பங்கை வகித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த மே 2 ஆம் தேதி, தமிழகத்தில் நடைபெற்ற  சட்டமன்ற தேர்தலின் முடிவுகள் வெளியாகின. இதில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான  கூட்டணி (காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் , மறுமலர்ச்சி முன்னேற்ற திராவிட கழகம், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) 155 இடங்களில், மூன்றில் இரண்டு பங்கு இடத்தை பிடித்து வெற்றிப் பெற்றுள்ளது.

இந்த கூட்டணியின் வெற்றிக்கு தலித்துகள், சிறுபான்மையினர்கள் மற்றும் உயர் சாதியினர்களின் வாக்குவங்கியே காரணம் எனவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருக்கும் சமூகங்கள் போதுமான ஆதரவை திமுக கூட்டணிக்கு வழங்கவில்லை எனவும் தேர்தல் முடிவுகளை வைத்து தி இந்து செய்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

‘அம்மா உணவகத்தைத் சேதப்படுத்திய திமுகவினர்’ – சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும் கட்சியிலிருந்து நீக்கவும் ஸ்டாலின் உத்தரவு

தென் தமிழகத்தை பொறுத்தவரை தேவர் சமுதாயத்தின் பெரும்பான்மையான வாக்குகள் அதிமுக கூட்டணிக்குச் சென்றுள்ளது (55%). 10 வாக்காளர்களில் இருவர் தான் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர் (19%). திமுக கூட்டணிக்கு நாடார், தேவேந்திர குல வேளாளர் மற்றும் கிறிஸ்துவர்கள் அதிகளவில் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

‘பெரும் நம்பிக்கையுடன் உள்ளோம்’ – திமுக வெற்றி குறித்து அற்புதம்மாள்

வடதமிழகத்தில், வன்னியர் சமுதாயத்தின் பெரும்பான்மையான வாக்குகளை, அதிமுக – பாமக கூட்டணி பெற்றுள்ளது (19%). வன்னியர்கள், முதலியார்கள் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அதிமுக கூட்டணிக்குச் சென்றிருப்பதாகவும், இருப்பினும் இரு சமுதாயத்தின் வாக்குகளும் முழுமையாக அதிமுக கூட்டணிக்கு செல்லவில்லை என்றும் 10 வாக்குகளில் 4 வாக்குகள் திமுக கூட்டணிக்குச் சென்றுள்ளது என்றும் தி இந்து  கூறுகிறது.

‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்’ – திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

வன்னியர் மற்றும் முதலியார் சமுதாயத்தின் வாக்குகள் திமுக கூட்டணிக்குச் செல்லவில்லை என்றாலும், தலித் சமுதாயத்தின் வாக்குகளை திமுக கூட்டணி முற்றிலுமாக அறுவடை செய்துள்ளது.

‘பிணமுண்டு வாழும் புழுவைவிட கீழானவர் நீங்கள்’- அதிமுக அமைச்சரின் காணொளிக்கு கண்டனம் தெரிவித்த ’நீட்’ அனிதாவின் அண்ணன்

மேற்கு மண்டலத்தை பொறுத்தவரை, கவுண்டர் சமுதாயத்தின்  வாக்குகள் பெரும்பான்மையாக அதிமுக கூட்டணிக்கு சென்றுள்ளது (59%). இந்த மண்டலத்தில் உள்ள அருந்ததியர் சமுதாயத்தின் வாக்குகளை பெற்றதால் (68%) தான் திமுக கூட்டணி மேற்கு மண்டலத்தில் கணிசமான வாக்குகளைப்  பெற்றுள்ளது எனவும் தி இந்து கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்