Aran Sei

விருதுநகர்: கூட்டுப்பாலியல் செய்யப்பட்ட பட்டியலின பெண் – குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 22 வயது பெண்ணை இரண்டு திமுக நிர்வாகிகள், நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், நேற்று (மார்ச் 21), விருதுநகரைச் சேர்ந்த ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீன், மாடசாமி மற்றும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படிக்கும் நான்கு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகரைச் சேர்ந்த திமுக பிரமுகரான ஹரிஹரன், 22 வயது பெண்ணுடன் நட்பாக பழகி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, தன்னுடன் பாலுறவு கொள்ள வற்புறுத்தி அத்துமீறியதாகவும் அதை படம் பிடித்துள்ள ஹரிஹரன் தனது நண்பர்களிடம் பரப்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான்: ஆதிக்கச் சாதியினரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியல் சாதி பெண்

பின்னர், அந்த காணொளியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவோமென மிரட்டி, ஹரிஹரன், அவரது நண்பர்கள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்களும், கடந்த இரண்டு மாதங்களில் பல சந்தர்ப்பங்களில் அப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறை கூறியுள்ளது. ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜூனைத் ஆகியோர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எட்டு பேர் மீதும் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆண்களின் மாநிலமாக ராஜஸ்தான் இருப்பதால்தான் பாலியல் வன்கொடுமை அதிகளவில் நடக்கிறது: ராஜஸ்தான் அமைச்சர் கருத்து

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376(2)(என்) (பாலியல் வன்கொடுமை), 354(இ), 354(ஈ) (பின்தொடர்தல்), 66 (உ) (தனியுரிமை மீறல்), 3(1)(w)(1) (குற்றங்களுக்கான தண்டனை), 3(2)(v) (குற்றங்களுக்கான தண்டனை) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹரிஹரன், ஜுனைத் அகமது, பிரவீன் மற்றும் மாடசாமி ஆகியோர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்காக சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு சிறுவர்களும் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிரியார் விடுதலை – பாதிக்கப்பட்ட கன்னியாஸ்ரிக்கு கேரள திரைக்கலைஞர்கள் ஆதரவு

இச்சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, “விருதுநகர் மாவட்டத்தில் 22 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது ஆறுதலைத் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றம் செய்தவர்கள் யாராக இருப்பினும் கடுமையாகத் தண்டிக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்