Aran Sei

மிரட்டப்படுவதாக தலித் ஊராட்சி மன்றத் தலைவர் புகார் – பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அமிர்தம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தான் தொடர்ந்து மிரட்டப்படுவதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் “ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் விஜயகுமாரும் ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமாரும் என்னை தொடர்ந்த மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சாதி பெயரைச் சொல்லித் திட்டுகிறார்கள் – ஊராட்சி மன்ற பெண் தலைவர்

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமிர்தம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியதாகவும்,. இதுகுறித்து பதில் அளிக்க காவல்துறை தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை தொடர்ந்து 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் புதிய தலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

தெற்குத்திட்டை தீண்டாமை: `தலைவருக்கு அவமானம்’ – செயலாளர் பணியிடை நீக்கம்

கடந்த சுதந்திர தினத்தன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றவிடாமல், விஜயகுமாரும், சசிகுமாரும் அமிர்தத்தை தடுத்ததாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து திருவள்ளுர் மாவட்ட ஆட்சித்தலைவர் மகேஸ்வரி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்தன் முன்னிலையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்