Aran Sei

காவல்துறை செயலி எதற்காக? : கொலையான வங்கி ஊழியர் – கண்டுகொள்ளாத காவல்துறை

Image Credits: The Hindu

ந்திரப் பிரதேச மகளிர் ஆணையத் தலைவர் வசிரெட்டி பத்மா, அனந்தபூர் சட்டமன்ற உறுப்பினர் அனந்த வெங்கடராமி ரெட்டி இருவரும், காவல் கண்காணிப்பாளர் பி.சத்யா யேசு பாபுவோடு கொலை செய்யப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சினேகாலதாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவரது உடல் தெருவில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தலித் அமைப்புகளின் கூட்டு குழு (Joint Action Committee of Dalit Organisations) அவர்களைத் தடுத்து நிறுத்தி, சினேகாலதா குறித்து அவதூறாகப் பேசிய ஐ டவுன் வட்ட ஆய்வாளர் (Circle Inspector) பிரதாப் ரெட்டியை உடனடியாக இடைநீக்கம் செய்யக் கோரியுள்ளனர்.

இந்தக் குழுவினர், அதிகாரிகளை வாகனங்களில் ஏற அனுமதிக்கவில்லை. முழக்கங்களை எழுப்பிக் கொண்டே இருந்த ஆர்வலர்கள், “சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் அந்தப் பெண் இப்போது உயிருடன் இருந்திருப்பார்” என்று கூறியுள்ளனர். இது ஒரு பதட்டமான சூழ்நிலைக்கு வழிவகுத்தது.

‘ஒரு பெண்ணாக இருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது’ – நடிகை அன்னா பென்

“சரியான நேரத்தில் செயல்படாததால் குற்றம் நடக்க அவர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால்,  துரிதமாகச் செயல்பட்டதாகக் கூறுகிறார்கள். இது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது” என்று இக்குழுவின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகவும் பிரபலமான திஷா செயலியும் (Disha App) காவலர்களும் எங்களை கைவிட்டுவிட்டனர் சினேலதாவின் தாய் எம்.லட்சுமி தேவி குற்றம் சாட்டியுள்ளார்.

சாதி பெயரைச் சொல்லித் திட்டுகிறார்கள் – ஊராட்சி மன்ற பெண் தலைவர்

“நான் திங்கள்கிழமை இரவு காவல் நிலையத்துக்குச் சென்றிருந்தேன். ஆனால் அவர்கள் எனது புகாரைப் பதிவு செய்யவில்லை. நான் திஷா செயலியை அழைத்தேன். அழைப்பை எடுத்த காவலர் நான் எங்கிருந்து அழைக்கிறேன் என்று கேட்டார். அதன் பின்னர் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு தெரிவித்து அழைப்பைத் துண்டித்து விட்டார்” என லட்சுமி தேவி புகார் தெரிவித்துள்ளார்.

ஆசிட் வீச்சு : பாதிக்கப்படும் பெண்களை கண்டுகொள்ளாத அரசு – தேசிய மகளிர் ஆணையம்

“குட்டி ராஜேஷ் (கட்டிட பணியாளர்) என்பவர் கடந்த ஒரு வருடமாக என் மகளுக்குத் தொல்லைகொடுத்து வந்தார், நான் அதைப் பற்றிக் காவலர்களிடம் தெரிவித்தேன். நான் ஐ டவுன் காவலர்களை அணுகியபோது, ​​அது ஒரு காதல் விவகாரம் என்றும் அவள் திரும்பி வருவாள் என்றும் சொன்னார்கள். இது ஒரு காதல் விவகாரம் என்றால், அந்த நபர் ஏன் என் மகளைக் கொள்ள வேண்டும்” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “என் கணவர் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். அவர் வீட்டில் இல்லாதபோது குட்டி ராஜேஷ் மது அருந்திவிட்டு எங்கள் வீட்டிற்கு வருவார்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிபிஎம் மற்றும் சிபிஐ மாவட்டத் தலைவர்கள் வி.ரம்புபால் மற்றும் டி.ஜக்தீஷ் சினேகாலதாவின் குடும்ப உறுப்பினர்களை ஆறுதல்படுத்தி அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்