Aran Sei

திருமண ஊர்வலத்தில் குதிரை சவாரி செய்யவிரும்பிய தலித் மணமகன் – கொலைமிரட்டல் விடுத்த ஆதிக்க சாதியினர்

த்தரபிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தின் போது குதிரையில் சவாரி செய்ய விரும்பிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மணமகனுக்கு ஆதிக்கசாதியினர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் – கிராமத்தை விட்டு வெளியேறப்போவதாக அறிவிப்பு

இந்நிலையில், அச்சமடைந்த மணமகனின் குடும்பத்தினர் காவல் துறையினரிடம் பாதுகாப்பு வேண்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள மணமகனின் தந்தை,” வரும் ஜூன் 18 என் மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அப்போது என் மகன் குதிரையில் சவாரி செய்ய விரும்பினார். இந்நிலையில் என் மகன் மிரட்டப்பட்டுள்ளார். மேலும், நீங்கள் இப்போது வேண்டுமானால் காவல்துறை பாதுகாப்பை பெற்று கொள்ளுங்கள். ஆனால், பின்னர் கொலை செய்துவிடுவோம்” என்று ஆதிக்கச் சாதியினர் கூறியதாக மனமகன் தந்தை குறிப்பிட்டதை  தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்

இந்நிலையில், இந்தச் சம்பவம்குறித்து தெரிவித்துள்ள மணமகன், “பழங்கால சடங்கின் படியே நான் திருமண ஊர்வலத்தின்போது குதிரையில் சவாரி செய்ய விரும்பினேன். ஆனால் மற்ற சாதியைச் சேர்ந்த ஆட்கள் அவ்வாறு செய்தால் கொலைசெய்விடுவதாக மிரட்டினார்கள்” என்று தெரிவித்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அறிந்த உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர் பாதிக்கப்பட்ட மணமகன் குடும்பத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளதாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்