Aran Sei

ராஜஸ்தானில் காதல் விவகாரத்தால் அடித்து கொல்லப்பட்ட பட்டியல் சமூக இளைஞர்: உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர் போராட்டம்

ராஜஸ்தானில் காதல் விவகாரம் தொடர்பாக தலித் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்டோபர் 7 ஆம் தேதி, ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கரில் உள்ள பிரேம்புரா பகுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜெகதீஷ் என்ற தலித் இளைஞரைச் சாகும் வரை கட்டையால் அடித்துக் கொன்றுள்ளனர்.

மேலும், முழு சம்பவத்தையும் காணொளியாக குற்றஞ்சாட்டப்பட்ட குழுவினர் படம்பிடித்துள்ளனர். அக்காணொளி வழியாக, தாக்குதலுக்குள்ளான ஜெகதீஷுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, பின்னர் மீண்டும் மீண்டும் கட்டையால் அடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஆசிட் வீச்சுக்கு உள்ளான தலித் கிறிஸ்தவ சிறுவன் மரணம் – தேவாலயத்திற்கு செல்லக்கூடாதென மிரட்டிய இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்டாரா?

அதைத் தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஜெகதீஷின் உடலை அவரது வீட்டிற்கு வெளியே புதைத்துள்ளனர் என்று ராஜஸ்தான் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், உயிரிழந்தவரின் உடலை எடுத்துச் செல்ல மறுத்த அவரது குடும்பத்தினர், குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதோடு, போதுமான இழப்பீட்டையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

காவல்துறையினரின் அறிக்கையில், இச்சம்பவம் தலித் இளைஞனான ஜெகதீஷின் காதல் விவகாரத்தின் காரணமாக நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘தலித்விரோதப்போக்கை கையாளும் காவல்துறை’ – ஆதிதிராவிடர்கள் குறிவைத்து கைதுசெய்யப்படுவதாக வன்னி அரசு குற்றச்சாட்டு

இவர்களில் முகேஷ், ஓம் பிரகாஷ் மற்றும் ஹன்ஸ்ராஜ் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களைப் பிடிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

மாவட்ட நிர்வாகம் உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து உடலைத் தகனம் செய்யச் சமாதானப்படுத்தியுள்ளது.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்