Aran Sei

‘கொரோனா பணியிலுள்ள தலித் மருத்துவ அதிகாரிகள் மீதான தீண்டாமை அதிகரிப்பு’ – சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்

கொரோனா பணி தொடர்பாக, தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித் அதிகாரிகளை சாதியைக் குறிப்பிட்டு இழிவாக திட்டும் போக்கும் அதிகரித்து வருகிறது என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா பணி தொடர்பாக, தலித் மருத்துவ அதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், தலித் அதிகாரிகளை சாதியைக் குறிப்பிட்டு இழிவாக திட்டும் போக்கும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இத்தகைய பிரச்சனை ஒன்றில், ஒரு தலித் மருத்துவ அதிகாரியை, ஓர் இளம் வயது மருத்துவ அதிகாரி இழிவாக திட்டியதோடு, சட்டையைப் பிடித்து அடித்தும் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

தலித்கள் மீதான பிரம்படி தாக்குதலை எதிர்த்த பேரணி : ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது

“அவர்  மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது. கொரோனா பணி தொடர்பாக ஒரு தலித் மருத்துவ அதிகாரிக்கும், மற்றோரு இளம் மருத்துவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், துறைவாரியாக பேசி உரிய தீர்வைக் காணாமல், தலித் மருத்துவ அதிகாரியை மட்டும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அவரது கைதில் மேல்மட்டத் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக மாண்புமிகு  அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தலையீடு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த கைது நடவடிக்கை, தலித் மருத்துவர்கள், மருத்து அதிகாரிகள் மத்தியில் அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.” என்று ஜி.ஆர்.இரவீந்திரநாத் சுட்டிக்காட்டியுள்ளார்.

தலித் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் அச்சத்தோடு, பாதுகாப்பற்ற சூழலில் பணி புரிய வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது என்றும் இதுகுறித்து தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கோரியுள்ளார்.

‘விவசாயிகள், தலித்துகளின் போராட்டங்களை ஆதரித்தால், தேசதுரோக வழக்கா?’ – வைகோ கண்டனம்

“கைது செய்யப்பட்ட தலித் மருத்துவரை உடனடியாக விழுப்புரம் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்.அவர்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். இந்நிகழ்வுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் மனித உரிமை ஆணையம் உடனடி விசாரணையை மேற்கொள்ள வேண்டும். தமிழக சுகாதாரத்துறை இந்நிகழ்வு குறித்து நேர்மையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்