அமைப்புசாரா துறையில் வேலை செய்யும் மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளையும், தேவையான சமூக பாதுகாப்பையும் வழங்கவும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தலித் உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித், பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
இதுதொடர்பாக, தலித் அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “விதவைகள், முதியப் பெண்கள், அனாதைப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களின் நிலை இந்த நெருக்கடி காலத்தில் மோசமாகி இருக்கக்கூடும். அவர்களுக்கு ஏற்கனவே அனுபவித்து வரும் ஒடுக்குமுறை இன்னும் ஆழமாகியிருக்க கூடும். அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் கூட அவர்களுக்கு சிரமம் ஏற்படலாம்.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், “உரிய ஆவணங்களைக் கேட்டு நிர்பந்திக்காமல் அனைவருக்கும் மானிய விலையில் உணவு தானியங்களும், சுகாதார சேவைகளும் வழங்க வேண்டும். இறப்புகள் அதிகரிப்பதால் தகன மேடைகளில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும், அங்கே வரும் பொதுமக்களுக்கும் பிபிஇ ஆடைகளை இலவச வழங்க வேண்டும். அவர்களுக்குத் தடுப்பு மருந்துகள் செலுத்துவதில் முன்னுரிமை வழங்க வேண்டும்.” என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலித்கள், பழங்குடிகள் போன்ற ஒடுக்கப்பட்ட சமூகத்துடன், நகர்ப்புற ஏழைகளுக்கு, அவர்களின் மோசமான சமூக-பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, இலவச தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் தலித் அமைப்புகளின் கூட்டாக கோரியுள்ளன.
Source; newindianexpress
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.