Aran Sei

குஜராத் : ‘உனக்கு எதற்கு உயர் சாதிப் பெயர்’ – தாக்கப்பட்ட தலித் இளைஞர்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவர், உயர் சாதி குடும்பப் பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறி சக ஊழியரால் தாக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக 3 பேர் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் சனந்தில் உள்ள மதர்சன் ஆட்டோ சிஸ்டம் ப்ரைவேட் லிமிடட் தொழிற்சாலையில், பாதிக்கப்பட்ட பாரத் ஜாதவ்வும், குற்றம்சாட்டப்பட்ட ஹர்ஷத் ராஜ்புத்தும் வேலை செய்து வந்துள்ளார்கள்.

ஹத்ராஸ் வன்கொடுமை – ஆசாத்தை வெளிப்படையாக மிரட்டும் உயர் சாதியினர்

இந்நிலையில், டிசம்பர் 2 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, வேலைக்கு வந்த பாரத் ஜாதவ்விடம் அவரது பெயரைக் கேட்டுள்ளார் ஹர்ஷத் ராஜ்புத். அதற்கு பாரத் ஜாதவ் பதிலளித்தபோது, ​​ராஜ்புத் எதுவும் சொல்லவில்லை. மீண்டும் மாலை 4 மணியளவில், பாரத் ஜாதவின் குடும்ப பின்னணியைப் பற்றி அவரிடம் கேட்டுள்ளார். அதற்குப் பாரத் ஜாதவ், தான் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பெத்தானி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று பதிலளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, ஹர்ஷத் ராஜ்புத் அவருடைய சாதியைக் கேட்டுள்ளார். அதற்கு, தான் ஒரு தலித் என்று பாரத் ஜாதவ் பதிலளித்ததைக்கேட்டு கோபமடைந்த ஹர்ஷத் ராஜ்புத், ஒரு தலித்தாக இருந்துக்கொண்டு ஏன் ஜாதவ் என்கிற க்ஷத்திரிய பெயரை வைத்துள்ளாய் என்றும், நீ ஏன் எங்கள் முன் சட்டை பட்டன்களை திமிராக கழற்றி விட்டிருக்கிறாய் என்றும் திட்டியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா இணையதளம் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

தீப்பெட்டி தராததால் தலித் கொலை – வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் இருவர் கைது

மேலும், தாங்கள் எனக்கு சகோதரரைப் போன்றவர் என்று பாரத் ஜாதவ், ஹர்ஷத் ராஜ்புத்துக்கு விளக்க முயன்றுள்ளார். அதற்குப் பிறகு, ஹர்ஷத் ராஜ்புத் அவரை வேலை நேரம் முடிந்த பிறகு தொழிற்சாலைக்கு வெளியே வந்து  சந்திக்கச் சொல்லியுள்ளார்.

இருவரும் வேலை முடிந்த பிறகு சந்தித்துள்ளனர். அப்போது ​​ஹர்ஷத்துடன் ராஜ்புத் சமூகத்தை சேர்ந்த நான்கு பேரு சேர்ந்து, பாரத் ஜாதவை கடுமையாக தாக்கியுள்ளனர். பாரத் ஜாதவ்வை அவர்கள் சாதியைச் சொல்லித் திட்டியதாகவும், ஒரு தலித் ஆக இருந்துக்கொண்டு தன்னை ராஜ்புத்தின் சகோதரர் என்று அழைத்துக்கொள்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் உனக்கு என்றும் மிரட்டியுள்ளதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

தீண்டாமைச் சுவர் : ’கேட்டது 17 உயிர்களுக்கு நீதி; கிடைத்தது பொய் வழக்குகள்’

தாக்குதலில் இருந்து தப்பித்து ஓடிய பாரத் ஜாதவ், அஹமதாபாத் மாவட்ட சனந்த் நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, அகமதாபாத் புறநகர் பகுதியில் வசிக்கும் ஹர்ஷத் ராஜ்புத் மற்றும் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 (தாக்குதல்), பிரிவு 504 (வேண்டுமென்றே அவமதிப்பு), பிரிவு 114 (குற்றம் நடக்கும்போது அதை ஊக்குவித்தல்) மற்றும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

’தீண்டாமைச் சுவரை அரசு விதிமுறையோடு கட்ட முடியுமா ? – நாகை திருவள்ளுவன்

அகமதாபாத் புறநகர் துணை காவல்துறை சூப்பிரண்டு பாஸ்கர் வியாஸ் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய போது, காவல்துறையினர் ஹர்ஷத் ராஜ்புத்தை கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களை அடையாளம் காணும் பனியில் காவல்துறையினர் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்