Aran Sei

பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு – குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பிணை வழங்கிய மும்பை நீதிமன்றம்

குத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், 2013 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சனாதன் சன்ஸ்தா (வலது சாரி அமைப்பு) உறுப்பினர் விக்ரம் பாவேவிற்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

எர்வாடா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் விக்ரம், ஒரு லட்சம் ரூபாய்க்கான பத்திரத்தைச் சமர்ப்பித்த பின்னர் விடுவிக்கப்படுவாரென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

NO MEANS NO – ஏன் இது ஆண்களுக்கு புரியவில்லை ? – வன்புணர்வு வழக்கில் இமாச்சல பிரதேச உயர் நீதிமன்றம் கேள்வி

விக்ரமின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே மற்றும் மனிஷ் பிடேல் அடங்கிய அமர்வு, புனேவில் உள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பை விட்டு வெளியேறக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

ஜூலை 21, 2020 ஆம் ஆண்டு விக்ரமிற்கு எதிராகப் போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி,  சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விக்ரமின்  ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் மத அரசியல் செய்கிறதா பாஜக?’ : தேஜஸ்வி சூர்யாவுக்கு வலுக்கும் கண்டனம்

ஆக்ஸ்ட் 20, 2013 ஆம் தேதி புனேவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மகாராஷ்டிரா அந்தஷ்ரதா நிர்மூலன் சமிதி அமைப்பின் நிறுவனரும், மூட நம்பிக்கை எதிர்ப்பு போராளியுமான 67 வயதான நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்