Aran Sei

பாடத்திட்டத்தில் கீதை – காங்கிரஸின் செயல்பாடுகளை நகலெடுக்கும் பாஜக – காங்கிரஸ் எம்.எல்.ஏ., டி.கே.சிவக்குமார் விமர்சனம்

ர்நாடக பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை கொண்டு வருவதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஒளிபரப்பப்பட்டது என்றும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக கமிட்டித் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

இது குறித்து, இன்று (மார்ச் 22), செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள டி.கே.சிவக்குமார், “ராஜிவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஒன்றியத்தில் ஆட்சியில் இருந்தபோது, இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் நெறிகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் பொருட்டு, அந்த புராணங்களை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியது. அதை நாடு முழுவதும் உள்ள மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்” என்று தெரிவித்துள்ளார்.

‘பகவத் கீதையை பள்ளியில் பாடமாக்குவது குறித்து மாநில அரசுகளே சிந்தியுங்கள்’ – ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

பாஜக அரசு தற்போது செய்து கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளை நகலெடுக்கும் வேலைதானே தவிர வேறில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதையை அறிமுகப்படுத்தட்டும், இதில் காங்கிரஸ் கட்சிக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இது ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதால், பைபிளையும் குரானையும் அறநெறி கல்வியில் அறிமுகப்படுத்த வேண்டும்” என்று டி.கே.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்