Aran Sei

சிலிண்டர் விலை உயர்வு : ஏழை வயிற்றிலடிக்கும் மத்திய அரசு – திருமாவளவன் குற்றச்சாட்டு

மையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 15 நாட்களில் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் உயர்த்தியிருப்பது பகற் கொள்ளையைவிட மோசமானது என்றும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை சுரண்டும் இந்த விலை உயர்வை மோடி அரசு உடனே திரும்பப்பெற்று பழைய விலைக்கே கொடுக்கவேண்டும் என வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை நொறுக்கும் மோடி அரசு – புதிய பாராளுமன்றத்தைக் கட்டுவது நகைமுரண் – திருமாவளவன்

மேலும், “உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருக்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையைத் தாறுமாறாக உயர்த்தி லிட்டர் 40 ரூபாய்க்கு விற்கவேண்டிய பெட்ரோலை 86 ரூபாய்க்கு விற்று மக்களை சுரண்டுகிறது மோடி அரசு. அது போதாதென்று சமையல் எரிவாயு விலையையும் தன் விருப்பம்போல் உயர்த்தி வருகிறது” என்று திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயல்கிறது பாஜக – திருமாவளவன் குற்றச்சாட்டு

கடந்த 12 நாட்களில் மட்டும் சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் விலை உயர்த்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி,  கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி சிலிண்டர் விலை 610 ரூபாயிலிருந்து 660 ரூபாயாக உயர்த்தப்பட்டதையும்,  டிசம்பர் 15 முதல் அது 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதையும்,  மோடி அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கை விசிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகள் மீதான தாக்குதல் பாஜகவின் வன்முறை வெறியாட்டம்” – தொல்.திருமாவளவன்

“கொரோனா பெருந்தொற்றால் வேலையோ வருமானமோ இல்லாமல் அவதிப்படும் மக்களிடம் இப்படி அப்பட்டமாகக் கொள்ளையடிக்கும் அரசாங்கம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை. ‘கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி; ஏழை மக்களுக்கு விலை உயர்வு’ என்பதுதான் மோடி அரசின் தாரக மந்திரமாக உள்ளது. ஏழை, நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றிலடிக்கும் இந்த விலை உயர்வைத் திரும்பப்பெற வேண்டும். பழைய விலைக்கே எரிவாயு சிலிண்டர் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிக்கையில் கூறியிருக்கிறார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்