Aran Sei

செவிலியர்களுக்கான பாடத்திட்டம்: “அழகு குறைவான பெண்ணின் திருமணத்திற்கு வரதட்சணை உதவுகிறது” – பகுதியை நீக்க சிவசேனா கோரிக்கை

ரதட்சணை முறை என்பது அழகு குறைவானபெண்களின் திருமணத்திற்கு உதவுகிறது என்று டீ.கே இந்திராணியின் செவிலியர்களுக்கான சமூகவியல் பாடப்புத்தகத்தின் வரதட்சணையின் நன்மைகள் எனும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

வரதட்சணை கொடுமை வழக்கில் குழந்தையோடு சிறையில் அடைக்கப்பட்ட பெண் – குழந்தையின் நலன் கருதி ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்

இந்தப் புத்தகம் இந்தியச் செவிலியர்களுக்கான சமூகவியல் பாடத்திட்டத்தின் படி எழுதப்பட்டுள்ளது என்று அதன் அட்டையில் கூறப்பட்டுள்ளது. வரதட்சணை முறையின் நன்மைகள் எனும் புத்தகத்தின் பக்கம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீட்டு உபயோக பொருட்களுடன் புதிய குடும்பத்தை நிறுவுவதற்கு வரதட்சணை உதவியாக இருக்கும். பெற்றோரின் சொத்தில் வரதட்சணை என்பது ஒரு பகுதிதான். வரதட்சணை குறைவாகக் கொடுக்கலாம் என்பதற்காகத்தான் பெண்களைப் பெற்றோர்கள் படிக்க வைக்கிறார்கள் என்று பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

எவை எல்லாம் வரதட்சணை மரணங்கள்? – புதிய விளக்கமளித்த உச்ச நீதிமன்றம்

வரதட்சணை முறை அழகு குறைவான பெண்களுக்கு அதிக அளவு வரதட்சணை கொடுப்பதால் நல்ல மணமகனுடன் திருமணம் நடக்கிறது என்று இறுதியாக இப்பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்பாடத்திட்டத்தின் படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சிவசேனா மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, உடனடியாக இப்பாடத்திட்டத்தை நீக்குமாறு ஒன்றிய அரசின்  கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்