“இந்தியாவின் சுதந்திரம், சகிப்புத்தன்மை, சமத்துவம், தனிமனித உரிமைகள் மற்றும் பன்முக கலாச்சாரத்தை மறுக்கும் ஒற்றை கலாச்சார தேசியவாதம் வளர்ந்து வருவது கவலையளிக்கிறது. என்றும் இது ஒரு மதப் பெரும்பான்மை என்ற போர்வையில் தேர்தல் பெரும்பான்மையைக் கொண்டு அரசியல் அதிகாரத்தை அடையத் துடிக்கிறது, இது நமது குடிமக்களை மத நம்பிக்கையின் அடிப்படையில் வேறுபடுத்துகிறது, சகிப்புத்தன்மையின்மையை வளர்க்கிறது. பிறரைத் தூண்டி விட்டு அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மையை ஊக்குவிக்கிறது’ என்று முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.
குடியரசு தினமான ஜனவரி 26 அன்று இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்த இணைய நிகழ்வில் ஹமீத் அன்சாரி இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
“இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராட வேண்டும்’ என்று முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார்.
முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் இந்த கருத்துக்களுக்குச் சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சர் முக்தார் அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவில் பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள், அரசியல் உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் மீறப்படுவதை” அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் ஏற்பாடு செய்த நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க செனட்டர் மற்றும் அமெரிக்கக் காங்கிரஸின் 3 உறுப்பினர்கள் கண்டித்துள்ளனர்.
Source : The Quint
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.