கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தின்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரை (BDO/ Block Development Officer) செருப்பால் அடித்ததாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரண்யா கைது செய்யப்பட்டுள்ளார்.
மே தினத்தை முன்னிட்டு ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. சுமார் நண்பகல் 12 மணி அளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி மற்றும் கிராம பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கர் கலந்து கொண்டார்.
பள்ளிப் பாடத்திட்டத்தில் சமஸ்கிருதம், ராமர், பரசுராமர் – மத்திய பிரதேச முதல்வர் அறிவிப்பு
அவர் அப்போது கிராம மக்களிடம் ஊராட்சி பற்றிய கருத்து கேட்பு மற்றும் நூறு நாள் வேலைத்திட்டத்தை பற்றிய வரவு செலவு கணக்கை பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார். அப்போது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான ஊராட்சி வரவு செலவு பொது நிதி பற்றி பேசிக்கொண்டு இருந்தார்.
அந்த சமயத்தில் கூட்டத்திலிருந்து திடீரென எழுந்து வந்த ஊராட்சி துணைத்தலைவர் சரண்யா தான் அணிந்திருந்த செருப்பால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசங்கரை தாக்கியுள்ளார்.
அப்போது ஊராட்சி பொதுமக்கள் தெரிவிக்கையில், ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் வட்டார வளத்துறை அதிகாரிக்கும் முன்விரோத பிரச்சினை இருந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
அடித்த சரண்யா மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி மன்ற தலைவர் இருவரும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்த காவல்துறையினர் ரவிசங்கர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.
Source: thenewsminute
உங்க உளறலை நிப்பாட்டுங்க கங்கை அமரன்| சுந்தரவள்ளி நேர்காண்ல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.