Aran Sei

இஸ்லாமியர்கள் மீதான கும்பல் வன்முறைக்கு இந்துத்துவ சிந்தனையே காரணம் – ஆர்.எஸ்.எஸ் தலைவரின் கருத்துக்கு அசாதுதீன் ஒவைசி பதிலடி

Asaduddin-Owaisi-TW-1579431006

சு மாட்டிற்கும் எருமைகளுக்கும்  வித்தியாசம் தெரியாத  குற்றவாளிகள்  தான், குறிப்பிட்ட சமுகத்தைச்  சார்ந்தவர்களின்  பெயரை வைத்து மட்டுமே  வன்முறையில்  ஈடுபடுகிறார்களா? என  மாட்டின்  பெயரால் நடக்கும் கும்பல் வன்முறைகள்  குறித்து  எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின்  தலைவர் அசாதுதீன் ஒவைசி கேள்வியெழுப்பியுள்ளதாக  என்.டி.டி.வி செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் முஸ்லிம் ராஷ்ட்ரிய மஞ்ச் என்னும்  நிகழ்வில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், முஸ்லிம் மற்றும் இதர சிறுபான்மையினர்  மீது  கும்பல் வன்முறையில்  ஈடுபடும் நபர்கள்  இந்துத்துவத்திற்கு எதிரானவர்கள்  என்று அவர்  பேசியதாகவும்  அந்த  செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மோசமான தடுப்பு மருந்து கொள்கைக்கான விருது, மோடிக்கு வழங்கப்பட வேண்டும் – அசாதுதீன் ஒவைசி

மேலும்,  கும்பல் வன்முறைக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும் என்றும்,  கும்பல் வன்முறையின் பேரில்  போலி வழக்குகள் பதியப்படுவதாகவும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்  அந்நிகழ்வில் கூறியதாக  என்.டி.டி.வி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரது  இந்த  கருத்துக்கு  பதிலளிக்கும் வகையில்  அசாதுதீன் ஒவைசி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மாட்டிற்கும், எருமைகளுக்கும்  வித்தியாசம் தெரியாத  குற்றவாளிகள்   தான் ஜுனைத், அக்லக், பெஹ்லு, ரக்பர், அலிமுதீன் போன்ற  குறிப்பிட்ட சமுகத்தின்  பெயரை  வைத்து மட்டும்  வன்முறையில்  ஈடுபடுகிறார்களா”  என்று  கூறியுள்ளதாக அந்த  செய்தி  கூறுகிறது.

“ஒருவரின் வாழ்க்கை முறை பிறர் நம்பிக்கையை எப்படி புண்படுத்தும்?” – இறைச்சி கடைகள் மூடுவது குறித்து ஒவைசி கேள்வி

மேலும்,  “இந்த குற்றவாளிகளுக்கு  இந்துத்துவ அரசாங்கத்தின் ஆதரவும்  இருக்கிறது”  என்று  அவர் கூறியுள்ளதாகவும்  என்.டி.டி.வி செய்தியில்  தெரிவிக்கப்படுள்ளது.

அதுமட்டுமின்றி, இஸ்லாமியர்கள்மீது நடத்தபட்ட  வன்முறைகள்குறித்த செய்திகளையும் அவர் தனது ட்விட்டர் கணக்கில்   பதிவிட்டுள்ளதாகவும், “கோழைத்தனம், வன்முறை மற்றும் கொலை போன்றவை கோட்சேவின் இந்துத்துவ சிந்தனையின்  ஒருங்கிணைந்தப் பகுதியாகும். இஸ்லாமியர்கள்மீதான  கும்பல் வன்முறைக்கும் அந்த சிந்தனையே காரணம்” என  எ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின்  தலைவர் அசாதுதீன் ஒவைசி குறிப்பிட்டுள்ளதாகவும்  அந்த  செய்தி  கூறுகிறது.

 

 

 

 

 

 

 

  

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்